செய்வதறியா நிலையே
உன் கவியினிடை ஆழ்ந்த இன்பக் காதலின்
அழுத்தத்தினை உணரும்பொழுதெல்லாம்,
கறுத்த இரவு மழைபொழுதில் கண்ணிமைக்கும்
கிழித்த மின்னல்க் கீற்றின் ஒளியாய்,
பழிச்சிடுகிறது, உன் விஷம் குழைத்த
என்பற்றிய பழிச் சொற்கள்.
நடப்பில் நம்பியே நிற்கும் என் மனம்
கண நேரம் விம்மியே துடிக்கிறது.
அதன் வெளிச் சிதறல்களே என் இந்த
முடிவில்லா தடுமாற்றங்கள்.
உன் ஒவ்வொரு நிகழ்கால நிச்சய அசைவுகளையும் உணர்வினும்,
தன்னிலை மறந்து தடம் புரண்டு
தவிக்கவே செய்கிறேன்.
உன்னிலை மாற்றி ஒருமுறை உணர்த்திடு
என்னிலை மாறிடும் உலகம் மறைந்து.
சுற்றிவரும் நிலவினை பற்றிவரச் சொல்
வெற்றியுடன் கட்டி வருகிறேன்.
சந்திப்பின் முடிவுகள் கனவாயே முடிந்தன
கலைந்த மேகக்கூட்டங்கள் என்வானில்.
செய்வதறியா நிலையே நம்வரையினில்.