விடை சொல்லடி தேவி

தனலெட்சுமி மகிழ்வோடு
தினமென்னை கண்டு
மனம் நிறைய
பணம் தந்தாள்
மனத்திற்கேது துக்கம்
மானத்திற்கேது பங்கம்

கள்வருள்ள வழியில்
செல்கிறேன் என்றால்
தனலெட்சுமியே என்னை
தவிர்த்து விடு
கள்வரிடம் மாட்டிவிட்டால்
கையில் பணமில்லை
மடியில் கனமில்லை
மனதில் பயமில்லை

பசி பஞ்சத்திலே
வயிறு வாடுகையிலே
இறக்க கூடாதென
இரப்பவனிடம் உந்தன்கால்
தூசியையாவது தனமிட்டு
பசியாறட்டும் பாவம்

கள்வர் இருக்கையிலே
தனலெட்சுமியே நீயிருந்தால்
மனமே பதறுதடி
பசி பாவிவந்தால்
தேவியுன்னை அழைப்பேனே
பாவிக்கு பணம்கொடு

கால கட்டாயத்தில்
தனலெட்சுமியே நீ
இருந்தாலும் சுகம்
இலையென்றாலும் சுகம்
இப்படிஎங்களை படாதபாடுபடுத்துவதில்
உனக்கென்ன சுகம்
விடை சொல்லடி தேவியே...

எழுதியவர் : இராகுல் கலையரசன் (30-Nov-16, 11:13 am)
Tanglish : vidai solladi thevi
பார்வை : 96

மேலே