தேடல்
உயிர் இல்லாது உடலும் வாழாது...
தேடல் இல்லாது உயிரும் பூமியிலேது...
தேடிச் செல்லாத வாழ்க்கைப் பயணங்கள்
ஓடாது நிற்கும் கடிகார முட்கள்......
மேகத்தின் தேடல்கள் மழையாய்ப் பொழிகிறது...
சோகத்தின் தேடல்கள் கண்ணீராய் வழிகிறது...
பணத்தின் தேடல்கள் பகையில் முடிகிறது...
பாசத்தின் தேடல்கள் உறவாய் மலர்கிறது......
வில்லில் புறப்படும் அம்பின் தேடல்
இலக்கை அடைந்ததும் இன்பம் தந்திடுமே...
வீணையின் நரம்பில் விரல்களின் தேடல்
இசையாய்ப் பிறந்து இதயத்தைக் கவந்திடுமே......
கண்ணை மூடிய கனவின் தேடலில்
உள்ளத்தின் ஆசைகள் உருவம் பெறுமே...
மண்ணை முட்டும் விதையின் தேடலில்
வேர்கள் புதைந்து விருட்சம் வளருமே......
நிசங்களைத் தேடியதும் திரும்பிப் பார்த்தால்
நினைவுகள் ஆயிரம் கதைகள் சொல்கிறதே...
நிம்மதி என்ற ஒன்றை மட்டும்
நிதம் தேடி மனமும் அலைகிறதே......