விண்மீன் சூழ்ச்சியோ

அடர்ந்த இரவு!
தனிமையான தார்சாலை!
என்றும் என்னுடன்
துணையாக வரும் அந்த
நிலவைக் காணவில்லை!
அங்கே வானில் என் கண்பட்ட
ஒரு விண்மீன் என்னிடம் கேட்டது
"நான் துணைக்கு வரட்டுமா?" என்று.
நான் மறுத்துவிட்டு செல்லத்
தொடங்கினேன் மிதி வண்டியில்.
அந்தக் கருஞ்சாலையில்,
எதிரே சற்றுத் தொலைவில்
எனக்கான ஒளியைக் கண்டேன்.
ஓ! அது அவள் தான்.
கவர்ந்துவிடலாமா?
கடந்துவிடலாமா?
கலந்துவிடலாமா?
என்ற எவ்வளவோ சிந்தனையில்
அந்த ஒளியின் அருகே சென்றவுடன்
என் நெஞ்சத்துள் ஓர் இருள்.
சற்று அச்சத்துடன் விரைவாகக்
கடந்து வந்தேன்!- ஏதோ
நகையாடும் ஒலிக் கேட்டு
வானை எட்டிப்பார்த்தேன்!
நான் உதறிவிட்டு வந்த
அந்த விண்மீன்!
விட்டால் அவள் முன்
விழுந்தே சிரித்திரிக்கும்.
"அவளிடம் சொல்லிவிடாதே"
என்று விண்மீனிடம் சொல்லிவிட்டு
திரும்பாமல் ஓட்டி வந்தேன்.
அதன் பின் என்னைப் பார்த்து அவள்
நகைக்கும் பொழுதெல்லாம்
எனக்குத் தோன்றுகிறது
"சூழ்ச்சிக்கார விண்மீன் சொல்லியிருக்குமோ?" என்று.

எழுதியவர் : சிவராமகிருட்டிணன் (30-Nov-16, 5:57 pm)
Tanglish : vinmeen
பார்வை : 114

மேலே