எதுவாயினும் பிச்சை எடுத்தல் இழிவின் உச்சம்

ஏழை, எளிய மக்களுக்கு,
மக்கள் தான் உதவ வேண்டிய நிலை உள்ளது..
பிறகெதற்கு அரசாங்கம்???..
மக்களாட்சி என்ற பீடிகை???...

கோட்டான்களின் அலறல்களாக, தேர்தல் நேரங்களில் மட்டும் வார்த்தை ஜாலங்கள் காட்டி, மக்களை ஏமாற்றும் அரசியல் கட்சிகளெதற்கு???...

என்ன இல்லை இந்த நாட்டில்???...

மக்களுடைய வரிப்பணத்தைக் கொள்ளையிடுவதற்குத் தானே கட்சியும், ஆட்சியும்....

அரசாங்கத்தின் விதவிதமான வியாபாரங்கள்...
தண்ணீரையும் விற்று காசு சம்பாதிக்கிறது...
மதுவென்னும் மெல்ல மெல்லக் கொல்லும் சாராயத்தையும் விற்கிறார்கள்...

புழுத்த அரிசியை இலவசமாகத் தந்தால் மட்டும் போதுமா???

தனது ஓட்டுரிமையைக் கூடக் காசுக்காக விற்கும் அறிவிலி மாக்களை நம்பி எதைச் சாதிக்க முடியும் இந்த நாட்டில்???...

தேசத்தந்தையாக விளங்கும் காந்தியைவே தேசத்துரோகி என்று வாய் கூசாமல் முழக்கமிடும் இவர்கள்,
பணத்திற்காக எதையும் செய்வார்கள்.....

எதிர்காலத்தில் எத்தனை துப்பாக்கிக் குண்டுகள் நம்மைத் துளைக்கக் காத்துக் கொண்டிருக்கின்றனவோ???...
எத்தனை அணுகுண்டுகள் நம்மைச் சிதைக்கக் காத்துக் கொண்டிருக்கின்றனவோ???...
யாரறிவார்???...

ஆனால், அவற்றைப் பற்றியெல்லாம் சிந்தித்துக் கவலைக் கொள்ளாதீர்கள் எனதன்பு சகோதர, சகோதரிகளே...

நல்லதொரு மனித சமுதாயம் அமைப்பதே நமது முதல் நோக்கம்...
அதற்காக முழு நம்பிக்கையோடு ஒற்றுமையாகப் போராடுவோம்....

எதுவாயினும் பிச்சையெடுத்தல் என்பதே இழிவின் உச்சம்....
யாவருக்கும் யாவும் கிடைத்தல் என்பதே உயர்வின் உச்சம்....

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (1-Dec-16, 12:20 am)
பார்வை : 220

மேலே