மனிதனில் வெறித்தனம் எதற்கு

ஆஆஆஆஆ....
ஓஓ! மானிடா..
பூத்துக் குலுங்கும் பூக்களைப் பார்த்தாயா???....
ஒவ்வொன்றும் எவ்வளவு அழகுடா!!???...
அவற்றில் தான் எத்தனை நிறங்களடா???...
இவ்வாறு நாம் இரசிக்கும் அந்த மலர்களை பிரசவிக்கும்
தாய் செடிகளைப் பார்த்தாயா???...
அவை எல்லாம் ஒரே நிறம் தானடா...
அது பச்சை நிறம் தானடா....
பச்சையுமின்றி பூக்களும் பூக்குமோ??..
காய்-கனிகளும் காய்க்குமோ???..
அதுபோல,
மனிதர்கள் பலரடா...
அவர்களுடைய எண்ணங்கள் வெவ்வேறடா....
ஆயினும்,
அவர்களுடைய உயிர் இயங்குவதோ ஆக்ஸிஜனில் தானடா...
அந்த ஆக்ஸிஜனை உடல் முழுவதும் எடுத்துச் செல்லும் ஹீமோகுளோபீன் நிறைந்த இரத்தத்தின் நிறம் சிவப்புடா....
பிறகெதற்காகடா,
சாதியையும், மதத்தையும் தலையில் வைத்துக் கொண்டாட வேண்டும்???...
ஒரு சொட்டு இரத்தம் தாரேனடா...
அது எந்த மதத்தை,
எந்த சாதியை,
எந்த மோழியை,
எந்த இனத்தை,
எந்த நாட்டைச் சேர்ந்ததென்று கூறடா வெறிப் பிடித்த மானிடா.???!....