தீட்டு

கழனியில் கால் பதித்து
நெல்மணிகளைச் சேர்த்தபோதும்
வாய்க்காலில் வந்த நீரைக் கொண்டு
மாடுகளைக் கழுவிய போதும்
பருத்திக்கொட்டையும் புண்ணாக்கும்
ஆட்டி மாடுகளைக் குடிக்க வைத்தபோதும்
வாராதத் தீட்டு வந்துவிட்டதாம்- அந்த
பால் சொம்பைத் தொட்டபோது.

எழுதியவர் : சிவராமகிருட்டிணன் (2-Dec-16, 6:21 am)
Tanglish : theettu
பார்வை : 81

மேலே