சிந்தையால் உறைந்த சிற்பம் --முஹம்மத் ஸர்பான்

பூக்களை பார்த்து
ரசிகனாக மாறினேன்
இலைகளை பார்த்து
ஞானியாக போகிறேன்

முடமான என்
கனவுகள் எல்லாம்
மீன்களை போல்
நீருக்குள் அழுகிறது

நதியில் நீந்தும்
ஊமைப் பந்து
பாறை மோதி
பரிதாபமானது

பட்டாம் பூச்சிகள்
வண்ணமிழந்ததால்
கூரைச் சிலந்திகள்
மனுக்கள் எழுதுகிறது

நிஜங்கள் மறந்து
உயிர்கள் துறந்து
மெய் தர்மங்கள்
மண் புதைகிறது

ஊமையின் ஒருமை
மூங்கில் யாத்திரை
தண்ணீரின் பன்மை
யுகத்தின் முத்திரை

கல்லறை ஒன்று
மனதில் உள்ளது
பொறாமை படும்
போது ஒளிர்கிறது

வானின் மேகங்கள்
நதியில் நீந்துகிறது
பூமியின் தாகங்கள்
வேரில் புதைகிறது

எழுதியவர் : முஹம்மத் ஸர்பான் (2-Dec-16, 9:07 am)
பார்வை : 210

மேலே