நீ வருவாய் என

என் இல்லம் தயார் ஆகிறது..
தரை சுவர் அனைத்தும்
சுத்தம் செய்யப்படுகிறது..
அலங்காரங்கள் நடைபெறுகிறது..
நீ வந்து சேரும் பட்சத்தில்
உன்னை வரவேற்க ஆயத்தம் ஆகிறது..
உன் வசதிக்காக
அறைகள் மாற்றி அமைக்கப்படுகிறது..
நீ இங்கு வசிக்கும் காலங்களில்
உன் தேவைகள் அனைத்தும்
குறைவின்றி நிறைவேற்றப்படும்..
உணவு எந்நேரமும் தயார்நிலையில்..
உறங்கி எழ சொகுசு தொட்டில்..
பேசி களிக்க பாடி மகிழ்விக்க
உன் சேட்டைகள் அனுபவிக்க
காத்திருப்பேன் நான்.....
நீ வராது போக நேர்ந்தால்
அனைத்தையும் சிதைத்து
உதிர்த்திடுவேன் உதிரமாய்...
முழுதும் அழுது தீர்த்த பின்
மீண்டும் தொடங்குவேன்..
ஆயத்தங்களை
நீ வருவாய் என!!!!

எழுதியவர் : அருணா சுப்ரமணியன் (2-Dec-16, 4:19 am)
Tanglish : nee varuvaay ena
பார்வை : 72

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே