கற்பனை காதலன்
விற்பனையாகாத நேரங்களை எழுதுகோளில் திணித்து,
விறுவிறுவென எதையோ எழுதிமுடித்தான் ஒருவன்...
முடித்ததை படிக்க தொடங்கினேன்...
"முதல் பார்வையில்,
வாய் வழிந்த உமிழ்நீர்...
மறுசந்திப்பின்,
குறுமுருவல் புன்னகை...
எடைமிகுந்த முதல் வார்த்தைகள்...
உரைத்தபின் காற்றில் பறந்த மனம்...
சற்றே மெருகேற்றபட்ட மகிழ்ச்சி...
சரியாக உவமைபடுத்தபடாத சோகம்...
பிழைகளுடன் எழுதப்பட்ட பிரிவுகள்...
சில வரிகளின்மேல்,
காய்ந்த கண்ணீர் துளிகள்..."
முடித்தபின் தெரிந்துகொண்டேன்...
அவன்...
கற்பனை காதலிகள் ஆயிரம் இருந்தும்..,
கற்பனையை மட்டும் காதல் செய்யும் கவிஞன் என்று...