காத்திருக்கிறார்கள் விலைபோக
காத்திருக்கிறார்கள்
விலைபோக.
தூண்டில் புழுவுக்கு
ஆசைப்பட்டு
சிக்கும் மீன்களாய்
ஒளிரும்
மெர்க்குரி விளக்குகளைத்
தேடி. விழும்
விட்டில் பூச்சி
ஆகின்றனர்,
பல அபலைப் பெண்கள்.
இறுதியில்.
அவமானத்தில்
வீணாய் மடிந்து
போகின்றனர்.
போதை ஏற்றி
பாதை மாற்றும்
சினிமாவை நம்பி
வீடு தாண்டி வரும்
குடும்ப விளக்குகள்
தெரு விளக்குகளாய்
மின்னுகின்றனர்.
ஓடி ஓடி
உழைத்து.
ஆடிக் களைத்து,
சலித்து
மணம் இல்லாத
காகிதப் பூக்களாய்
தெருவில்
எறியப்படும்
இவர்கள்
விலைபேசும்
வாடிக்கையாளருக்காக
செயற்கை வண்ணம்
கூட்டி
சிரிப்பைக் காட்டி
காத்திருக்கிறார்கள்
விற்பனைக்காக.
மீனாகோபி.