நட்பு

ஆயிரம் ரோஜாக்கள்
அழகாய் பூத்தாலும்
அனைத்தும் தோற்று போய்விடும்
உன் நட்பு எனும்
நந்தவனத்தின் முன்னால்!!

நட்பின் இலக்கணத்தை
உன் மொழி தனில்
உணர்ந்து கொண்டேன்!!

உறவுகளின் பிரிவு தனை
உன் நட்பினில்
தொலைத்து விட்டேன்!!

எங்கேயோ தொலைந்து போன
என்னை மீண்டும்
அறிமுகபடுதினாய் உன்
நட்பெனும் முகவரி தந்து!

அன்னையின் அன்பினை
நட்பினில் உணர்த்தியமையால்
நீயும் அன்னை ஆனாய்!
நானும் பிள்ளை ஆனேன்!!

பாசத்தில் உருவம் தனை
பண்பாய் காட்டியதால்
நீ தமையனானாய்
நான் தங்கை ஆனேன்

எத்தனையோ உறவுதனில்
கரைந்து போன கண்ணீரில்
கரையாமல் இருந்தது
நீஉம் உன் நட்பும்!!

எண்ணங்கள் பௌர்ணமியானாலும்
நிகழ்வுகள் தேய்பிறையாய்
என்றுமே என்னுள்!!

உன்னால் மட்டுமே உணர்ந்தேன்
தேய்பிறையிலும் பௌர்ணமி ஒளியை!
உன் நட்பினில் மட்டுமே
உணர்கிறேன் அன்பின் மொழியை!

காலத்தோடு கைகோர்த்து நடக்கும்
இயந்திர வாழ்வுடன் - உன் நட்போடு
கைகோர்கவே விரும்புகிறேன்!
விட்டு விடாதே! விரல்களை அல்ல!
உன் நட்பு தனை!!
விட்டாலும் விட்டு விடுவேன்!!
நட்பை அல்ல!!

என் உயிரினை!!

எழுதியவர் : (5-Jul-11, 4:10 pm)
சேர்த்தது : Sheenu
Tanglish : natpu
பார்வை : 479

மேலே