வரமாய் பெற்றது...நட்பு
உன்னிடம் உண்மையாய் இருப்பது
நட்பு
உனக்கு உண்மையை உணர்த்துவது
நட்பு
உந்தன் நினைவுகள் சுமப்பது
நட்பு
உந்தன் நலம் மட்டுமே நாடுவது
நட்பு
உன் தனிமை தகர்ப்பது
நட்பு
உந்தன் சோகம் சுமப்பது
நட்பு
உன் உள் உணர்வுகளில் வாழ்வது
நட்பு
உந்தன் மனம் மகிழச்செய்வது
நட்பு
என்றும் ரகசியம் இல்லாதது
நட்பு
என்றும் பிரிவை விரும்பாதது
நட்பு
ஆம்
நான் தவமிருந்து வரமாய் பெற்றது
நட்பு