நிஜமாய் வேறில்லை

கண்மணியே...

அன்பை கொண்டுதான் அரவணைத்தேன் உனை அடிமையாய் இல்லை..

உரிமை என்றுதான் கடிந்துகொண்டேன் உனை உண்மையாய் வேறில்லை..

உறவு என்றுதான் நெஞ்சில்வைத்தேன் உனை உடைப்பதற்காய் இல்லை..

இனிமை ஒன்றுதான் பேச்சில்வைப்பேன் உனை இகழ்வதாய் இல்லை..

ஏக்கம் கொண்டுதான் நாடிவந்தேன் உனை ஏய்த்திடுவதாய் இல்லை..

காதல் ஒன்றுதான் என்னில்வைத்தேன் உனை காணாமல் நாளில்லை..

உயிர்நீ என்றுதான் உடலுள்வைத்தேன் உனை உணராமல் என்றுமில்லை..

எழுதியவர் : தாஜூ (3-Dec-16, 1:40 am)
Tanglish : nijamaai verillai
பார்வை : 125

மேலே