படம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் படத்திற்கு ஹைக்கூ கவிஞர் இரா இரவி
படம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் !
படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
சிறு துளியில்
பெரிய வானம்
ஹைக்கூ !
உணர்த்தும் மலர்கள்
மூன்று வரிதான்
ஹைக்கூ !
வண்டுகளின்
தொல்லை தாங்காமல்
கவிழ்ந்தன மலர்கள் !
மழை நின்றபின்னும்
தூறல்
மலர்களிலிருந்து !
பனித்துளிகளின்
பயணம்
மண்ணை நோக்கி !