தென்றலே எனை களவு கொள்ள வந்தாயோ
காகிதம் கரையுதே
என் கவியும் நனையுதே
மெல்லிய தாகம் தந்து
எனை மெய்சிலிர்க்க வைத்தாயே..
புதைந்த என் பக்கங்களும்
பூவிதல் மலர்ந்து புதுக்கவியானதே..
என் மதி கொண்ட மயக்கம் இன்று
மயிலிரகாய் விரித்தாடுத்தே..
பொட்டிக்குள்ள பூட்டி வெச்ச நினைப்பெல்லாம்
சிட்டுக்குருவியாய்
சிறகு விரிச்சு பறக்குதே..
பள்ளிக்கூட நினைவுகளும்
பாவையவள் பார்வையும்
பனித்துளியாய் சிதறுதே..
கொஞ்சி வளர்த்த சொந்தங்களும்
திட்டி தீர்த்த நண்பர்களும்
தேகம் தொட்ட மழையும்
வானம் தொட்ட விரல்களும்
எட்டி பிடித்த நிலவும்
நினைவாய் இனிக்குதே..
சோகம் தொலைத்து
சுகம் தந்திட
எனைத் தீண்டி
என் இதயம் தீண்டி..
"தென்றலே"
எனை களவு கொள்ள
வந்தாயோ..!!
இவன்..
நாகரீக கோமாளி..!!