கனவில் வந்த பாலகன்

உதய காலை வேளையில்
இனிய கனவொன்று கண்டேன்

சின்ன சின்ன பாலகன் ஒருவன்
பால் வடியும் முகத்தான் அவன்

கைகளில் காப்புடனும் புல்லாங்குழலுடனும்
கால்களில் கொஞ்சும் சலங்கையுடனும்

நீல நிற வட்ட வட்ட வண்ண முகத்தின் மேலே
இறுகக்கட்டிய கார்க் குழல் ஆடிட

அதில் ஒற்றை மயிர்ப்பீலி ஒன்று
அழகிற்கு அழகு காட்டிட

மஞ்சள் நிற பட்டாடை அணிந்து
இடுப்பில் தங்க ஒட்டியாணம் அணிந்து

பவள வாய்த் திறந்து
முத்து பற்கள் கொண்டு
விஷமச் சிரிப்பு சிரித்து கொண்டு

என்னை எழுப்பினான் பிள்ளான்
தன்னுடன் விளையாட
என்னை அழைத்தான்

கண் விழித்தேன்
சுற்று முற்றும் தேடினேன்

காணவில்லை அந்த
எந்தன் மாய கண்ணன்

அக்கணமே அவன்
அந்த சின்ன சின்ன பாலகன்
நீல மணி வண்ணன்
கமலக் கண்ணன்
வானவர்த் தலைவன் மாதவன்
பால கிருட்டிணன் தான் என்று
அறிந்து கொண்டேன்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (4-Dec-16, 12:20 pm)
பார்வை : 135

மேலே