காலைப்பனியும் கதிரவனும் சிலேடை

காலைப்பனியும் கதிரவனும் சிலேடை

எங்கோ மூலையில் துயில் கொண்டிருந்த என்னை
எவ்வளவோ தொலைவில் இருக்கும் உந்தன்
இதமான ந(நி)னைவுகளால் எப்படித் தீண்டிச் சென்றாய்?
எந்தன் கன்னக் கதிர்களுள் படர்ந்து சென்றாய்!

எந்தன் உறக்கத்தைக் கலைத்துவிட்டாயே!
உலவலாம் என்று எழ நினைத்தால்
எங்கோ இருந்து என்மேல் படர்ந்து கண்களைக்
கட்டிப்போட்டு கனவினிலே கிடத்திவிட்டாய்!

எப்படியோ முயன்று வெளியே வருகையில்
புல்மேல் புன்னகையாகவும்
மலர்மேல் வண்ணமாகவும்
மரத்தின்மேல் நீர் ஊற்றாகவும் இருக்கும் நீ
நான் பார்க்க மறைகிறாய்.

நீ எப்படி மாறினாலும்
எப்படியும் பிடிக்கலாம் என்று
எட்டிப் பார்க்கையில்
எப்படி மறைந்தாயென்று தெரியாமல்
எங்கேயோச் சென்றுவிட்டாய்!

ஏன் வந்து எழுப்பினாய்?
நான் தேட நினைத்து எழுகையில்
எங்கே சென்று மறைந்தாய்?
எப்படியும் மீண்டும் நாளைவருவாய்!
எத்தனை நாள்தான் இந்த
வேடிக்கையென்று நானும் பார்க்கிறேன்.

இப்படியாக,
கதிரவனும் காலைப்பனியும்
நானும் அவள் நினைவுகளும்.

எழுதியவர் : சிவராமகிருட்டிணன் (4-Dec-16, 11:38 am)
பார்வை : 155

மேலே