கடைத் திருடன்- Shoplifter
நான் பிறந்து, வளர்ந்து, படித்து, தோழில் புரிந்த ஈழத்தில் இருந்து, போர் நிமித்தம் அகதியாக பல வருடங்களுக்கு முன் கனடாவந்து, பல வேலைகள் செய்து, கனேடிய பிரஜையானவன்;. பல வருடங்கள் செக்கியூரிட்டி கொம்பெனி ஒன்றில் வேலை செய்பவன்;. கார் பார்க், வைத்தியசாலைகள் , பெரிய துணிக்கடைகள் போன்ற இடங்களில் செக்கியூரிட்டியாக வேலை செய்த அனுபவம் எனக்குண்டு. நான் செய்ம் தொழில் நான் படித்துப் பட்டம் பெற்ற கல்வித் திறமைக்கு பொருத்தமானதல்ல என்பது எனக்குத் தெரியும். கனடாவில் நல்ல கிரெடிட் ஸ்கோரும், வருமானமும் இருந்தால் தான் மதிப்புண்டு.
பல கடைகளில் தெரிந்தெடுக்கும்; பொருட்களை வாங்கவருபவர்கள் சிலர்,; பணம் செலுத்தாமல் எடுத்துச் செனறால் வெளியேறும் வாசலில் அலார்ம் அடிக்கத்தொடங்கும்;. உடனே செக்கியூரிட்டி பிரசன்னமாகிவிடுவான். அதுமட்டுமல்ல கடைக்கு வந்து, பொருட்களைத் தேர்ந்தெடுப்போரை அவதானித்து, அவர்களின் அசைவுகளில் இருந்து, அவர்கள் நோக்கம் என்ன என்பதை அறியும் அளவுக்கு செக்கியூரிட்டியான எனக்;கு பயிற்;சி கொடுக்கப்பட்டுள்ளது.
பொருட்களை கடைகளில் திருடுவது சிலருக்கு உள்ள ஒரு விதமான வியாதி எனவும் கருதலாம். சிலர் உண்மையில் திருடர்கள் அல்ல. பணம் உள்ளவர்களும் இந்தப் பழக்கத்துக்கு ஆளாகி இருக்;கலாம். எனக்கு nதிந்தமட்டில இதை க்ளெப்டோமெனியா (Kliptomania) எனப்டும் அணிச்சைத் திருட்டுக் குணம் என்று அழைப்பர். பிரபல்யமானவர்கள் பலருககுக இக்குணம் உண்டு. எனக்குத் தெரிந்த மட்டில் சிறீலங்காவில் உயர் பொலீஸ் அதிகாரியாக வேலை செய்த ஒருவர் வேலை நிமித்தம் லண்டன் சென்றிருந்த போது மாரக்ஸ் அண்ட் ஸ்பென்சர் என்ற பிரபல்யமான கடையில் திருடியதற்காக செக்கியூரிட்டியால் கண்டுபிடிக்கபட்டார். இரு சிறிலஙகா ஓட்ட வீரரகள் கனடாவில் உள்ள எட்மண்டன் நகரில், கடையொன்றில்; திருடியதுக்காக கைதுசெய்யப்பட்ட சம்பவம் பலர் அறிந்ததே. பணம் படைத்த பிரபல்யமானவர்கள் கூட கடைகளில் தம்மை அறியாமல் திருடும் பழக்கத்துக்கு உற்பட்டுளார்கள். எனக்குத் தெரிந்தவர் ஒருவர் உணவு அருந்த ரெஸ்டரொண்டுக்குப் போய் திரும்போது அவரையறியாமலே தேக்கரண்டி, முட்கரண்டி, உணவு உண்ணும்போது பாவிக்கும் கத்தி, மேசயில் மலர்கள் வைக்கப்பட்டிருக்கும் வாஸ் போன்றவை அவர் பார்வைக்கு பலியாகிறது.
டொரன்றொவில் உள்ள வோல் மார்ட் (Wall Mart) என்ற பிரபல்யமான விற்பனைக் கடைக்கு என்னை செக்கியூரிட்டியாக நியமித்தியிருந்தார்கள். அன்று வெப்பநிலை பூஜ்யத்துக்கு பத்து டிகிரி குறைவு என்பதால் குளிரை நினைத்து பார்க்கக் கூட முடியாது. ஸ்னோ பொழிந்து கொண்டு இருந்தது அந்த படும்குளிரிலும் தூங்குவதற்கு இடம் இல்லாமல் வோல் மார்ட்டுக்கு அருகே உள்ள ஒதுக்குப் புற பிளட்போர்ம்மில்; அந்த வயது வந்த மனிதர் தூங்குவதை பலதடவை அவதானித்திருக்கிறேன். அவர்; தோற்றத்தில் இருந்து கனடா பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர் என நான் ஊகிக்க முடிந்தது. அம்மனிதரைப்போல் பல வீடு இல்லாதவர்கள் தூங்கும் இடம் பாதையோரம். சிறீலங்கா, இந்தியா போன்ற தென் கிழக்குத் தேசங்களில் தெரு ஓரத்தில் தூங்குவது சர்வசாதாரண காட்சி. பொலீஸ், அவர்களைத் தட்டி எழுப்பி துரத்திவிடுவார்கள். வெப்ப நிலை கனடாபோல் குளிராக இல்லாதபடியால் போர்வையில்லாது தூங்குவார்கள். ஆனால் கனடாவில் குளிர்காலத்தில் அது முடியாத காரியம். வீடு இல்லாதவர்களுக்கு என அரசு தங்குவதற்கு ஒழுங்கு செய்;திருந்தாலும் அங்கு போய் தூங்க சிலர் விரும்புவதில்லை. காரணம் சுதந்திரமாக செயல்பட முடியாததே.
நான் தினமும் வோல்மாரட்டில் எனது காரை பார்க் செய்யும் போது சந்திக்கும் அந்த முதியவர் கனடாவின் பழம்குடிமகனாவான், என்பது அவரின் தொற்றத்தில் இருந்து ஊகித்தேன். வட அமெரிக்க சிவப்பு இந்தியர்கள் என்ற பெயரும் அவர்களுக்க உண்டு. இயற்கையைத் தெய்வமாக மதிப்பவர்கள். ஸ்னோவால் மூடி இருக்கும் கார்களை அவர் சுத்தப்படுத்துவதை நான் கண்டிருக்கிறேன். அவரி;ன் சேவைக்கு சிலர் பணம் கொடுப்பார்கள். வேறு சிலர் இலவசச் சேவையாகப் கருதுவார்கள்.
எனது காரை தினமும் அம் முதியவர் சுத்தப்படுத்தவார். நானும் ஏதாவது சில டொலர்களை; அவர ;செலவுக்காக கொடுப்பேன். அம்முதியவர் அமைதியாக செய்யம் வேலையால் நான அவரைப்பற்றி அறிய ஆர்வம் கொண்டு. அவரோடு உரையாட ஆரம்பித்தேன்.
“ உம்முடைய பெயர் என்ன ஐயா”?
“ நான் மிசிசாகாவின் முதல் தேசத்தை (First Nation) சேர்ந்த ஒகேமாவ்”
“அந்த பெயரின் அரத்தம் என்ன’?
“எங்களது இனத்தின் சிப்பேவா மொழியின், படி மன்னன் என்ற அர்த்தமாகும்”
“ நல்ல பெயர் தான். ஆனால் நீர் மன்னனைப் போல் வாழவில்லையே”?
“ இது தான் இந்நாட்டின் முதல் தேச மக்கள் எனப்படும் பழங்குடி மக்களின் நிலை. ஒரு காலத்தில் பெருமையோடு, சுதந்திரமாக வாழ்ந்த இனம எஙகள் இனம்;. எங்களுக்கு என்று ஒரு கலாச்சாரம,; மொழி இருந்தது”
“ஒன்;ராறியோ மாகாணத்தில் உள்ள மிசிசாகாவில் மட்டுமா முதல்தேசத்து மக்கள் (First Nation People) என்ற பழங்குடி இனம் வாழ்கிறது”?
“ இல்லை. ஓன்றாரியோ மாகாணத்தில் மட்டும் பதின் இரண்டு பழங்குடி இன மக்கள் வாழ்கிறார்கள். என் இன மக்கள் மிசிசாகவில் பல காணிகளுக்கு உரிமையாளர்களாக இருந்தார்கள். ஆனால் இப்போது நிலமை வேறு”
“ ஏன் என்ன நடந்தது’? நான் முதியவரைக் கேட்டேன்..
“ பிரிட்டிஷ். பிரஞ்சு ஆகியோரின் வருகையால் படிப்படியாக எங்கள் காணிகள் பறிபோயிற்று. கிரெடிட்வலி (ஊசநனவை ஏயடடநல) நதி அருகே என் பெற்றோருக்கு பல ஏக்கர’ காணிகள் இருந்தது. அக்காணிகளை அபிவிருத்தி என்ற பெயரில் அரசு சுவீpகரித்துவிட்டது; எங்கள் இனத்தில் பலருக்கு வீடுகிடையாது.
“ நீர் படித்து, நல்ல வேலை செய்திருக்கலாமே”
“ என் பெறறோர் குடியிலும், சூதாட்டத்திலும் தான் முக்கிய கவனம் செலுத்தினார்கள். எனக்கும் அந்தப் பழக்கம் தொத்திவிட்டது. இப்பொது இந்த நிலைக்கு நான் வர அதுவே காரணம்”
கனடாவின் பழங்குடிமகனின் தற்போதைய நிலைகுறித்து கவலை அடைந்தேன். இதே நிலைதான் பல நாடுகளில் பழங்குடிமக்களின் நிலையும். சிறீலங்காவில் வாழும் பழங்குடியினமான வேடவர் இனத்துக்கும் அதே நிலைதான். இவர்கள் வழி வந்ததே சிங்கள இனம்.
*******
அன்று நத்தாருக்கு பொருட்கள் வாங்குவதற்றகாக வோல் மார்ட்டில் (றுயடட ஆயசவ) எக்கச்சக்கமான கூட்டம். என் கண்கள் அங்கும் இங்குமாக சுழன்று கொண்டிருந்தது. எனது பார்வை சுமார் இருபது வயதுiடைய இளைஞன் ஒருவன்மேல் பதிந்தது;. அவன் நடந்த விதம, அஙக அசைவுகள்; எனக்கு அவன் மேல் சந்தேகத்தை ஏற்படுத்தியது.;; ஒரு ஸ்வெட்டர் , கம்பளிப் போர்வை சில அப்பில்கள், பிஸ்கட் பக்கட் ஆகியவற்றை அவன் சுற்றுமுற்றும் பார்த்தபடியே தேர்ந்தெடுத்து, தன் கையில் இருந்த பையுக்குள் போட்டான். என் கண்கள் அவனைத் தொடர்ந்தது. பொருட்களின் பெறுமதிப் பணத்தை விற்பனைக் கவுணடரில் செலுத்துவான் என எதிர்பார்த்த எனக்கு, ஏமாற்றம். அங்கும் இங்கும் பார்த்துவிட்டு நேரடியாக கடையை விட்டு வெளியேறும் வாசலுக்கு அவன் வந்தான். அவ்வளவு தான். நான் தாமதிக்கமல் அனைக் பிடித்தேன்.
“ ஏய் என்ன பையுக்குள் வைத்திருக்கிறாய்?. எங்கே பையைத் திறந்து காட்டு” என்று அவனிடம் இருந்து பையைப் பறித்துப் பார்த்;தேன். நான் பாரத்துக் கொண்டிருக்கும் போது அவன் தேர்ந்து எடுத்த பொருட்கள் பையக்குள் இருந்தன. அதன் மொத்த விலை கூட்டிப் பாரத்தேன். 110 டோலர்கள் வந்தது.
அவனை அழைத்துக் கொண்டு என் அறைக்குள் போனேன்.
“ உன் பெயர் என்ன“? நான் அதட்டி அவனைக் கேட்டேன.
அவன் நடுங்கிய படி “ராஜன் சேர்” என்றான்.
“நீ பிறந்த நாடு இந்தியாவா”?
“ இல்லை. சிறீலங்கா சேர்”
“ நீ தமிழா”?
“ ஓம் சேர்”
“ இலங்கையில் எங்கை பிறந்தனி”?
“என் ஊர் முல்லைத்தீவு. போரினால் பாதிகப்பட்டு இங்கை புலம் பெயர்ந்தனான்”இ ராஜன் பதில் சொன்னான.;
“ கனடவுக்கு வந்து கனகாலமோ’?
;” ஒருவருடமாகிறது சேர்”.
“ உனக்கு அகதியாக வாழ அனுமதி கிடைத்துவிட்டதா’?
“ இல்லைசேர். கேஸ் நடக்குது”
“ உன்னை இந்த திருட்டுச் செயலுக்காக போலீசில் நான் ஒப்படைத்தால், அதன் விளைவு என்னவென்று உனக்குத் தெரியும் தானே”?
அவன பதில் சொல்லாது தலை குனிந்த படி பேசாமல் நின்றான்.
“ உன்னைத் திரும்பவும் சிறீலங்காவுக்கு திருப்பி அனுப்பி விடுவார்கள். தெரியும் தானே”?
அவன் பதில் சொல்லாது தயைல குனிந்தபடி நின்றான்.
“ நீ படிக்கிறாயா அல்லது வேலை ஏதும் செய்கிறாயா.?
“ சிறு சிறு வேலைகள் செய்கிறேன்”இ அவன் பதில் அளித்தான்.
“ எப்படியான வேலைகள்”?
“கார்கள் கழுவுவது, பேப்பர் விநியோகிப்பது, வீட்டு தோட்ங்களில் புல்; வெட்டுவது, டிரைவ் வேயில உள்ள ஸ்னோ தள்ளுவது, ரெஸ்டொரண்டுகளில் பிளேட் கழுவுவது போன்ற வேலைகள்”.
“ உனக்குப் போதிய வருமானம் இல்லாவிட்டால் எதற்காக 110 டொலர்கள் பெறுமதியான இந்த பொருட்களைத் திருடினாய்’?
நூன் ஆங்கிலத்தில கேட்ட கேள்விகளுக்கு திக்கித் திக்கி ஆங்கிலத்தில பதில் சொன்னான்.
“ உனக்கு ஆங்கிலம் பேசவராதா”
“ அவ்வளவுக்கு வராது சேர்”;
“ என் படிக்கலாமே”?
“ காசு இல்லை சேர்”
“ உனக்குத் தெரியுமா நீ திருடிய் பொருட்களின் விலை கிட்டத்தட்ட 110 டொலர்கள் என்று”
அவன் தலையை ஆட்டி ஒப்புக்கொண்டான்.
“ அதுசரி உனக்காகவா இந்தப் பொருட்களை களவெடுத்தாய்.”?
“ இல்லை சேர்”.
“ அப்போ யாருக்குக் கொடுக்க”?
“ நான் கார் கழுவும் போது சந்தித்த முதியவருக்கு கொடுக்க. அவருக்க படுக்க இடமில்லை. உண்ண உணவில்லை. இந்த படு குளிரில் தெருஓரத்தில் படுக்கிறார். குளிரில் இருந்து பாதுகாகக் நல்ல உடுப்புகள் இல்லை. அவர் இந்த நாட்டு பழம் குடிமகன்”
“ உனக்கு எப்படி அது தெரியும்’?
“ அவர் தன்னைப்பற்றி முழு விபரம் எனக்குச் சொன்னவர். அவர் நிலை அறிந்து அவருக்குக் கொடுக்கவே இந்தச் சாமான்களைத் எடுத்தனான்”.
“ என்ன நீ உண்மையா சொல்லுகிறாய்?
“ நான் சொல்வது எல்லாம் உண்மை சேர்”
“ எதற்காக உனக்கு அந்த முதியவர் மேல் அவ்வளவுக்கு அனுதாபம் வந்தது.”?
“ நானும் அவரைப் போல் அதே நிலையில் நான் பிறநத நாட்டில் வாழ்ந்தனான். என் தந்தை ஒரு விவசாயி. ஆவரின உருத்திபுரக்; காணி வீடு எல்லாம் ஆர்மி வசமாயிட்டது. என்னை புலிகள் இயக்த்தைச் சேர்ந்தவன் என்று சந்தேகித்து கைது செய்ய தேடித்திருந்தது. ஏதோ சேர்த்து வைத்த பணத்தில், ஏஜன்சி மூலம் என்னை என் அப்பா இங்கை அனப்பிவைத்தார்”இ என்றான் நா தளும்ப ராஜன்;
ராஜனின் மனிதாபிமான நோக்கம் என்னைத் திகைக்க வைத்தது.
“ கையில் இருந்தால தான்; தானம் செய்யலாம். அது தெரியமா உனக்கு”?
“ தெரியும் சார்.”
நான் சற்று நேரம் சிந்தித்துவிட்டு என் பேர்சை திறந்து அதறகுள் இருந்த ஆறு, இருபது டொலர் நோட்டுகளை அவனிடம் கொடுத்து
“ இந்தா 120 டொலர்கள். சாமான்களின் விலை 110 டொலர். பணத்தை சேல்ஸ் கவுண்டரில் கொணடு போய் சாமான்கனை காட்டி, பணததைக கட்டிவிட்டு எனக்கு ரசீதை கொண்டு வந்து காட்டு” என்றேன்.
அவன் பதில் பேசாமல், நான் கொடுத்த பணத்தை கொண்டுபோய பொருட்கனை காட்டி பணத்தை செலுத்தி விட்டு பொருட்களோடும் மிகுதி பணம் 10 டொலர்களோடும் என்னிடம் வந்தான்.
“இத்தொருங்கோ சேர் மிகுதி பணம் 10 டொலர்கள். நீங்கள் என்னை பொலீசிடம் ஒப்படைக்காமல் செய்த உதவியை என் வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டேன். மிகவு நன்ற சேர்” என்றான் ராஜன்.
“ நீயே மிகுதிப் பணத்தை வைத்துக்கொள். உன் மனிதபிமான குணத்துக்கு என் வெகுமதியாக இது இருக்கட்டும். இனியும் இந்தத் திருட்டு வேலை செய்யாதே. நீ உழைத்து வரும் பணத்தில் தானம் செய்” என்றேன்.
கடைத்திருடன் ராஜன்; கண்களில் கண்ணீர் வழிய என் கரங்களைப் பற்றிக் கொஞ்சினான். அவனது கண்ணீர் என் செக்கியூரிடடி யுனிபோர்மை நனைத்தது.
(யாவும் கற்பனையே)
********