வாழ்வில் மறைவு தரும் தாக்கம்

இந்த பூமியில் வந்தவரெல்லாம்
ஒரு நாள் மறைவது திண்ணம்
இது வல்லவனே வகுத்த விதி
இந்த விதிக்கு விலக்கில்லை
ஆம் அந்த வல்லவனே வந்து
மண்ணில் பிறந்தாலும்
ஒரு நாள் மறைவது உறுதி
ராமனாய் அவதாரம் எடுத்தான்
ஒருவனுக்கு ஒருத்தி என்று நிலைநிறுத்தி
ராமா ராஜ்யத்தை உலக நெறியாய்க் காட்டி
சரயு நதியில் ஒரு நாள் மறைந்தான் இறைவன்
இது திரேதாயுகத்தில் நடந்த கதை
அதன் பின்னர் துவாபர யுகத்தில்
அவன் கண்ணனாய் வந்து பிறந்தான்
வீணர்களை வீழ்த்தி நீதி நிலை நாட்டி
உலகிற்கே உகந்த கீதோபதேசம் செய்தான்
பாரத யுத்தத்தில் பாண்டவர்க்கு துணையாய் நின்று
தீய கௌரவர்களை வீழ்த்தினான்
பின்னர் தானும் ஒரு நாள்
மானிடர்போல் மறைந்தான்
மா முனிவரும், யோகிகளும்
மறைந்து போனார்கள்
புத்தனாய், ஜைனனாய், கிறிஸ்துவாய்
பிறந்தான் உலகுக்கு நல்வழி காட்டியபின்
மறைந்தார் இவ்ரகள் புண்ணியராய்
மா மன்னவரும் சரி மேதைகளும் சரி
உலகை ஆளவந்த அரசியல் தலைவரும் சரி
ஒரு நாள் மண்ணை விட்டு போவது திண்ணம்

இத்தனையும் நான் கூறி கவிபாட
காரணம் உண்டு அதுதான்
மரணத்தைக் கண்டு பயம் கொள்ளாதே
மனமே மரணம் ஒரு நாள்
எல்லாக்கும் உண்டு அது
இந்த பூத உடலுக்கு தான்
உயிருக்கில்லை அது
படைத்தவனையே நாடி போய்விடும்

உயிருள்ளவரை நல்லவராய் வாழ்வோம்
நல்லதை செய்வோம்
நல்லதற்காகவே வாழ்வோம்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (6-Dec-16, 7:59 am)
பார்வை : 103

மேலே