வரலாறு வாழ்த்தும்
உன்னுடைய
அரசியலிலும்
செயல்பாடுகளிலும்
எனக்கு
ஆயிரம் விமர்சனங்கள்
இருக்கலாம்
ஆனால்
கடந்த
கால்நூற்றாண்டாய்
தமிழகத்தின்
ஆளுமையும்
அடையாளமும்
நீ மட்டுமே
ஆணாதிக்க
அரசியலில்
தனியொரு
பெண்சிங்கமாய்
கர்ஜித்தவள்
நீ !
உன்
அறிவுத் திறன்கண்டு
அண்டை மாநிலங்கள்
அதிர்ந்து போனதுண்டு
உன்
தவறுகளை
இந்தத் தலைமுறை
விவாதிக்கக் கூடும்
ஆனால் உன்
தைரியமும்
மதிநுட்பமும்
வரலாற்றின் பக்கங்களில்
வைர வரிகளால்
நிச்சயமாய்
பதிவு செய்யப்படும்!