அம்மாஅம்மா
அள்ளி,அள்ளி வழங்கின அல்லிராணி பாரியே,
சொல்லிவிட்டு போகாம கண்மூடி போறியே...
உலகமே அழுவுதம்மா உன்னால...உள்ளம்
சில்லு,சில்லா உடைஞ்சதம்மா தன்னால..
நடிச்சி பேர்புகழ் சேர்த்தவ...நீ
உழைச்சி பல வெற்றி பார்த்தவ..
அச்சம் என்பது உன் அகராதியில் இல்லையே..
ரெட்டைஇலை தாங்கிய வட்டமுக முல்லையே..
இரும்பு இதயம் இன்று இயங்காமல் போனதே..
அரும்பும் விழிநீரும் கடல் தாண்டி ஓடுதே...
மூச்சைவிட்டு நீ உறங்குகிறாய் அம்மா..
ஆட்சிகட்டிலில் இனி யார் வந்தாலும் சும்மா.
தாயில்லா பிள்ளையா தவிக்குதம்மா நாடு.
நீயில்லா நிலையை எண்ணி கதறுது நெஞ்சகூடு.
பெண்ணாக பிறந்து நீ ஆண்போல ஆண்டாய்.
மண்ணாண்ட தாயே நீ விண்ணால மாண்டாய்.
வங்கக்கடலோரம் உறங்கப்போகும் சிங்கமே.
தங்கத்தாரகையே உன்புகழ் இனி எங்குமே..