மாற்றம் மரித்துப் போனது --முஹம்மத் ஸர்பான்

சிந்தி மனிதா!
சித்தாந்தம்
சிதறி போனது
தேசம் மேல்
மக்களுக்காய்
வானவில் நீ
சுடர் பாய்ச்சி
ஓய்ந்த மனம்
பாரத தாரகை

முத்து தீவு
சத்தங்கள்
ஊமையானது
மலர் ஆய்வு
உதிர்ந்தது
காற்றின் ஓய்வு
அழுகின்றது
விட்டில் பூச்சி
சாசனம் எழுதி
சோகங்களை
ஏந்துகின்றது

மக்களுக்காய்
உயிர் துறந்த
மனித மனமே!
காயப் பட்டு
மூச்சுக் காற்று
துயர் திறந்த
அவலம் இன்று
வானின் முகில்
துளிகள் சிந்திட
நீலக் கடலும்
துக்கம் ஏந்திட
மக்கள் மனதில்
சோக வானிலை

விடியல் ஒன்று
வெண் பகலில்
மறைந்து போனது
விழிகள் இன்று
பொய்யானது
கானல் வெள்ளம்
மெய்யானது
உள்ளம் கோடி
நொந்து போனது
மாற்றம் ஒன்று
மரணம் வாசல்
தட்டிப் பார்த்தது

எழுதியவர் : முஹம்மத் ஸர்பான் (6-Dec-16, 8:47 am)
பார்வை : 1280

மேலே