ஜெகம் ஆளும் ஜெயலலிதா

சரித்திரப் புகழோடு
சந்தனப் பெட்டியில்
உறங்கச் சென்றது
ஜெயலலிதா எனும்
சகாப்தம்...

எனினும்
காலமெல்லாம்
வாழ்ந்திருக்கும் அவரது
நாமம்...

சந்தியா பெற்றெடுத்த
இந்தக் குழந்தை
தரைமேல் பிறந்து
கைகால் ஆட்டி
அழுதது பிறந்த அன்று...

அவருக்காக
சலனமற்றுப்போன
அவர் உடல் கண்டு
அவரது தொண்டர்கள்
அழுகின்றனர் இன்று...

ஜெயம் கொண்ட
ஜெயலலிதாவின்
சுவாசம் நின்று போனது
அவர் ஆண்ட தமிழகத்தில்...
அவர்மீது மாறாத
நேசம் என்றும் வாழும்
ஜெகம் முழுவதிலும்...

சந்தியாவின் புதல்வி
இறவாப்புகழ் கொண்டு
இந்தியாவின் புதல்வியாய்
மறைந்து போனார்...

மண்ணில் மூழ்கியது
மனித உடல் அல்ல
துணிச்சலின் விதை!
👍

எழுதியவர் : சுந்தரராஜன் ராஜகோபால் (6-Dec-16, 6:58 pm)
பார்வை : 93

மேலே