ஓ நிலவுமகளே உன்னைக் காணும் அறுகதையற்றவனா நான்

மொட்டை மாடியில் படுத்து, அமைதியான பரந்த வானில் குளிர்ந்த ஒளிவீசும் நிலவு மகளவளை பார்த்திருந்தேன்..
மனம் நிம்மதியில் லயித்திருந்தது...
சிந்தையில்
ஒருநிலையுற்றேன்...
என் வாய் இதழ்களை புன்னகைத்தன என்னை அறியாமலே...
அதைக் கண்டு பொறாமை கொண்டனவோ அந்த மேகக் கூட்டங்கள்?!..
நிலவுமகளிடத்தே வந்து,
என்னை காணவிடாமல் மறைந்தன...
என் புன்னகையும் காணாமல் போனது...

" ஓ நிலவே! உன்னைக் காணும் அறுகதையற்றவனா நான்?", என்ற விரக்தி குடியேறியதென் மனதிலே...

என்றுமில்லாமல் இன்று எனது கண்கள் குளமாயின...
என் கண்ணீர் கண்டு இரங்கியதோ அந்த காற்று?!...
மேகக்கூட்டங்களை அந்த நிலவு மகளிடமிருந்து விலக்கி, அழைத்துச் சென்றது...

மேகம் முழுவதும் விலகியபின் அவ்விடம் கண்டேன்,
நிலவு மகளானவள் என்னை நோக்கி கள்ளம், கபடமில்லா சிரிப்பை ஒளியாய் வீசி, " ஏன் அழுகிறாய்? ", என்று கேட்பது போல் பார்த்தாள்...

கண்ணீரைத் துடைத்து கொண்டேன்,
கண்ணீரின் காரணமறியாமலே...
மீண்டும் நிம்மதியானது மனதிலே குடியேறியது...
எந்தன் சிந்தை ஒருநிலையுற்றது...
பேரானத்தில் அப்படியே லயித்திருக்கிறேன்...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (8-Dec-16, 8:48 pm)
பார்வை : 1040

மேலே