காதல் நேரம்
(கடற்கரையில் மாலை 6 மணியளவில் இவன் காத்துகொண்டு இருக்கிறான்,அவன் காதலை நேற்று சொல்லி. இன்று மாலை ஏழுமணியளவில் இவள் வந்தால் காதலை ஏற்றாள் என்று அர்த்தம், இல்லையேல் நிராகரிப்பு என்று அர்த்தம்!! )
இன்று மட்டும் இந்த
கடற்கரையில் ஏன் இத்தனை மாற்றம்!
மணம் கொண்டுவந்த காற்று - இன்று
என்னிடம் மட்டும் இசைகொண்டு வருகிறது!
நுரை சுமந்த அலை - இன்று
என்னிடம் மட்டும் தேன்சுமந்து வருகிறது!
ஓ!! என்னென்ன மாற்றம்!இன்னும்
ஒரு மணிநேரம் இருக்கிறது இந்த
மாற்றத்தின் பலனுக்கு!
ஆகா! இந்த கடற்கரை மணலில்
எனது பெயரும்,அவள் பெயரும்
எழுதிய பொழுது அலைகள் வணங்கிச்சென்றதே
தவிற அழித்துவிட வில்லையே!
இதுதான் காதலுக்கு வணக்கமா??
இந்த காற்று இசை என்ற பெயரில்
எங்கள் இருபெயரையும் இசைத்துச்செல்கிறதே
தவிற கோரஒலிகள் எழுப்பலையே!
இதுதான் காதலின் கீதமா??
அங்கு பாருங்கள்!!!
சூரியன் கடலோடு சங்கமம் கொள்கிறது!
இது காதலை அழகுபடுத்த வந்த காட்சியா??
ஓ!!என்ன இது??
இன்னும் வரவில்லையே தேவி?
என்னை தேடி அலைந்திருப்பாளோ??
நாற்புறமும் தேடியும் இல்லையே!!
இயற்கையில் ஏன் தீடீர் மாற்றங்கள்??
காற்றே! ஏன் மரணத்தின்
மணம் கொண்டு வருகிறாய்??
இசை எங்கே??
அலையே! ஏன் காலில்
நுரை இட்டு செல்கிறாய்??
தேன் எங்கே?
இன்று மட்டும் ஏன்
சீக்கிரம் இருள்கிறது வானம்?
என் காதலுக்கு கறுப்புகொடி காட்டுகிறதா??
இன்று மட்டும் ஏன்
வெகுவாக கடக்கிறது நேரம்?
என் காதல் நிராகரிப்பின் அடையாளமா??
ஓ!!நேரம் ஆகிவிட்டதே!!
என் ஜீவனும் உருகிவிட்டதே!!
இருளை போல மனமும் இன்று!
ஏதோ ஒரு ஔிவிளக்கு தெரிகிறதே?!!
அதென்ன மெல்லிய ஔித்துகளா?? இல்லையேல்?
நிலவின் சூரியனா??
ஆ!!ஆ!! அதோ என் காதலின் தேன்மழை !