குமாரின் கேள்வி

எழில்: "ஏன்டா குமார், நேற்றைக்கு என்னடா இறந்த வீட்டுக்கு போய் அங்கிருந்த பெரியவர்கிட்ட ஏதோ கேட்டியாமே.. என்னடா கேட்ட?"

குமார்: "அத ஏண்டா கேக்குற.. மூணு நாள் முன்னாடி நம்ம நண்பன் கல்யாண விழால அவருதான் என்கிட்ட கேட்டாரு, 'உன்கூட இருந்தவனுக்கு கல்யாணம் ஆகிடுச்சே, அடுத்து நீதானே!'னு..

எழில்: "ஆமாடா.. அதுக்கு?"

குமார்: "அதான் நேத்து அவர் நண்பன் இறந்த வீட்டுல போய் அவர்கிட்ட சொல்லிக்கிட்டு வந்தேன்டா 'உங்ககூட இருந்தவரு போய் சேந்துட்டாரு.. அடுத்து நீங்கதானே!'னு"

எழில்: "அடப்பாவி.........."

எழுதியவர் : ரசீன் இக்பால் (11-Dec-16, 8:23 pm)
பார்வை : 206

மேலே