ராமு-சோமு உரையாடல்- உப்பங்குழி பார்த்து சோமு மொழிகள் -சிந்திக்க, சிரிக்க
ராமு-சோமு பாண்டிச்சேரி அருகே உப்பங்குழி
பார்க்க சென்றார்கள் அப்போது ஓர் உரையாடல்
ராமு : டேய் சோமு இந்த உப்பங்குழி பார்த்து உனக்கு என்ன
தோணுது சொல்லு பார்ப்போம்
சோமு : ராமு அண்ணே, கடல் தாய் நமக்கு கொடுப்பது இந்த
உப்பு அளவோடு சேர்த்தால் பண்டங்கள் சுவைக்க கூடும்
உடலுக்கும் சுகம் முடிவில் மகிழ்ச்சி .......ஆனால்
அளவிற்கு அதிகமாய் இதன் மீது ஆசைக்கு கொள்வதற்கில்லை
இல்லையா அண்ணே ...............
அது போல வாழ்வில் மோகங்கள் அத்தனையும் அண்ணே
பெண் மோகம்,பொன் மோகம்,பயணத்தின் மீது மோகம்
வலுக்கட்டாயம்மை ஒரு பொருளை அடையும் வெறி
இவைகள் எல்லாம்.........................
அண்ணே இந்த உப்பை ஒரு விரலில் தேய்த்து சுவைத்தால்
உப்பின் சுவை..................அதையே ஒரு சிட்டிகை வாயில் போட்டா
கரிக்கும் அண்ணே ............
வாழ்வில் அதிக ஆசை உப்பு கரிப்பது போல்.....
இது தான்உப்பங்குழி எனக்கு சொல்லுது அண்ணே
ராமு : அடேங்கப்பா எந்த ரேஞ்சுக்கு நீ பேசறே
அப்பப்பா.............!!!!!!!!!!!!!!!!!!!