பல விகற்ப பஃறொடை வெண்பா காவேரி நீர்தர வேமறுத்து விட்டதொரு
பல விகற்ப பஃறொடை வெண்பா ..
காவேரி நீர்தர வேமறுத்து விட்டதொரு
காரணத்தால் சம்பா விதைவிதைத்துக் காத்திருந்த
வேளார் துயர்நீக்க வந்ததோர்ந டப்புயலும்
நீர்தராமல் சென்றுவிட ஆழ்கடல் கொந்தளிக்க
வார்தாவாய் வந்துவிட்டாள் நீர்வளங்கள் மேல்பொழிந்து
சம்பாவைக் காத்திட வே
12-12-2016