கிராமம் நகரம்

மரமிடையே வீடிருந்தால்
கிராமம்
வீடுகளுக்கு இடையே
மரம் இருந்தால்
நகரம்

சேவல்
குப்பை மேட்டில் கூவினால்
கிராமம்
செல்போன் கூட்டில் கூவினால்
நகரம்

பள்ளியில் விளையாட்டு
கிராமம்
விளையாட்டுக்குப் பள்ளி
நகரம்

பக்கத்து வீட்டிற்குச்
சேர்த்துச் சமைத்தால்
கிராமம்
தன்வீட்டிற்கு ஓட்டலில்
பார்சல் கட்டினால்
நகரம்

நெல்லுக்கு நீரிறைத்தால்
கிராமம்
புல்லுக்கு நீரிறைத்தால்
நகரம்

கிராமம்
மண்வாசம் மணம்வீசும்
நகரம்
திரவியங்கள் தினம்பேசும்

கடவுள் வரமளித்தால்
நகரங்கள் கிராமம் ஆகட்டும்
இல்லையேல்
கிராமங்கள் நகரமாகும்
பின்
மனிதன் வாழா
நரகமாகும்.....

எழுதியவர் : சிந்தை சீனிவாசன் (14-Dec-16, 3:03 pm)
சேர்த்தது : சிந்தை சீனிவாசன்
பார்வை : 566

மேலே