என் உறவுக்காக
![](https://eluthu.com/images/loading.gif)
அடர்ந்த காட்டுக்குள்
எந்த பக்கம் திரும்பினாலும் மரங்களும்
மரங்களின் நிழலும் தான்...
நம் வீட்டில் எங்கு திரும்பினாலும்,
உன் முகங்களும் உன்நினைவுகளும் தான்...
எங்கெங்கும்,
இதை செய்யாதே என குட்டு வாங்கின சத்தம்...
அன்னைஇடம் செல்ல சண்டை இடும் சத்தம்...
சந்தோசமாக ஓடி ஆடின சத்தம்...
நானிருப்பேன் எல்லாவற்றுக்கும்..என அரவணைத்து விட்டு
இப்படி தனியாக விட்டு செல்லும் காரணம் என்னவோ தமயனே...
கடைசியாக மிஞ்சியது உன் நினைவுகள் மட்டும் தானே...
நெருப்பினால் அழிக்க க்க முடியாத நினைவுகளை சுமந்து கொண்டு
அலைந்து திரியும் என் மனதை நீ பாராயோ...
திரும்பி எங்களிடம் வாராயோ...என் உறவே...
-அண்ணனை இழந்து வாடும் ஒரு தங்கையின் புலம்பல்...