ஒரு ஊர்ல இப்படியும் ஒரு காதல்

ஒரு ஊர்ல இப்படியும் ஒரு காதல்

கருக்கம்பட்டி தங்களை அன்புடன் வரவேற்கின்றது என்ற தகவல் பலகையைக் கடந்து கருக்கம்பட்டி வழியாக தொண்டையூர் செல்லும் அரசுப்பேருந்து பாம்… பாம்… பாம்… ஆரனுடனும் அதிகமான புகை கொனரலுடனும் பீ… பீ… என்ற விசில் சத்தத்தில் கருக்கம்பட்டியில் நின்றது. கடிகாரமுள் சரியாக காலை ஏழு முப்பது மணியைத் தொட்டு நிற்க ஏறவும் இறங்கவுமாக இருந்த பயணிகளை விளக்கி வேகமாக ஏறிக் கொண்டிருந்தனர்.
பள்ளிக்குழந்தைகள் மற்றும் கல்லூரி மாணவ மாணவியர்கள். எறங்கவும் ஏறுங்க! எறங்கவும் ஏறுங்க! ஏ சொன்னா கேழுங்கப்பா! என்று கையால் பேருந்தின் மேற்கூறையைத் தட்டியும் தொண்டைத்தண்ணி வத்தவும் கத்திக் கொண்டிருந்த நடத்துனரின் குரல் யார் காதையும் தொட்டதா இல்லையா என்பதே தெரியாத அளவிற்கு கூட்டம் நிறம்பி நின்றிருந்தது.
சில மாணவர்கள் படியில் தொங்கிக்கொண்டிருந்தனர் பலர் இருக்கைகளில் உக்காந்திருந்தனர். ஏறி உள்ள வாங்க… உள்ள வாங்க… என்றதோடு போகட்டும் என்ற சத்தத்தில் ஓட்டுநரின் கவனத்துடன் மெல்லமாக பேருந்து நகன்றது. படியில் தொங்கிக் கொண்டிருந்த வினோத் தன் நோட்டுகளை சாளரத்தின் வழியாக உள்ளே நீட்ட அதை வாங்கி தன் மடியில் வைத்து பத்திரப்படுத்தினால் பிரியங்கா. வினோத்தின் கரங்கள் படிக் கம்பியைச் சரியாகப் பற்றியிருக்கின்றனவா? இல்லையா? கீழே விழுந்துடுவானா என்ற அச்சத்தோடே பிரியங்காவின் விழிகள் வினோத்தை நோட்டமிட்டுக் கொண்டே வந்தன. தன் புறமே அதிக நேரமாக பார்த்துக் கொண்டிருக்கும் அவளை இவனும் பார்த்தும் பார்க்காதவன்போல பல நாட்களாக கவனித்து வந்தான்.
தொண்டையூர் வந்துருச்சு எல்லாரும் எறங்குங்க! என்ற உரத்த சப்தத்தில் எல்லோரும் இறங்கினர். பியங்கா தன் மார்போடு அனைத்துப் பிடித்திருந்த நோட்டுகளை அவனிடம் கொடுக்க நன்றி பிரியங்கா… எதுக்கு வினோத் நன்றி சொல்ற நான் தான் உனக்கு நன்றி சொல்லனும் உன் நோட்ட என்கிட்டக் குடுத்து வச்சதுக்கு சரி பா… வா… நேரம் ஆகிடுச்சு சீக்கிரம் போகலாம் விரைந்து நடந்ததில் வந்துவிட்டது ஜெயம் கல்லூரி. பி.ஏ. முதலாமாண்டு வரலாறு என்று எழுதப்பட்டிருந்த வகுப்பறைக்குள் விரைந்து நுழைந்ததும் அப்பாடா… நல்ல வேளைக்கு வாத்தியார் யாரும் வரல என்ற பரியங்காவின் குரல் இளைத்துக் கொண்டு ஓடி படிகளில் ஏறிய வினோத்தை ஆறுதல் படுத்தியது. ஐந்து நிமிடத்தில் வந்த பேராசிரியர் ரத்தினம் நாட்டின் மொத்தக் கண்டங்கள் பற்றிய ஒரு பாடம் நடத்தினார். அவருக்குப்பிறகு இருவர் என்ற மூன்று வகுப்பறை முடிந்தது. மதிய உணவுக்கு மணியும் ஒலித்தது.
வினோத் நீ எங்க சாப்பிடப்போற! பாண்டி ஓட்டல்லயா? ஏன் பிரியங்கா உனக்கு எதும் வாங்கனுமா? இல்ல பசங்க எல்லாரும் அங்க சாப்பாடு நல்லாயிருக்காதுன்னு சொல்றாங்க ஆனால் நீ மட்டும் எப்பிடி தெனாமும் அங்கயே சாப்புடுற? அது ஒன்னுமில்ல பா… அங்கதா தயிர்சாதம் அஞ்சு ரூபாய்க்கு தராங்க அதான். ஓ… அப்படியா? மன்னிச்சிரு வினோத் நான் கேட்டது தப்பாயிருந்தா மன்னிச்சிரு அய்யயோ அப்பிடிலாம் இல்லபா நீ வேற ஏன் இதுக்குப் போய் மன்னிப்பு கேக்குற? நீ தப்பா எடுத்துக்காட்டி நான் ஒன்னு சொல்லவா? வினோத். ம், சொல்லு என்னா சொல்லப்போற? சொல்லுபா நீ யாரு என் வகுப்பு பொண்ணுதானெ நான் தப்பா எடுத்துக்க மாட்N;ட நீ எதாயிருந்தாலும் சொல்லுபா, நீ நாளைக்கிருந்து ஏங்கூடயே சாப்புடுறயா? நான் தெனாமும் எங்க வீட்டுல இருந்து நம்ம ரெண்டு பேருக்கும் சாப்பாடு கொண்டு வாரேன்.
வேனாம்ப்பா> உங்க வீட்டுல யாரும் பாத்தா உன்னத்திட்டுவாங்க அதலாம் திட்ட மாட்டாங்கப்பா> நான் எங்க வீட்டுக்கு செல்லப் பொண்ணு தெரியுமா? நான் கேக்குறத எங்க அம்மா செஞ்சு தருவாங்க எங்க அப்பா அதே மாதிரித்தா அப்ரம் எங்க அண்ணா மட்டும் அப்பப்போ சண்டபோடுவான் ஆனா ஏம்மேல ரொம்ப பாசமாயிருப்பா. சரி இங்கவா இந்த டிஃபன்ல இருக்க சோற ரெண்டு பேரும் பாதிப் பாதியா சாப்பிடலாம். நாளைக்கிருந்து பெரிய டிஃபன்ல எடுத்து வாரேன். என்று உணவு டப்பாவைத் திறந்தாள். அட இந்த சாப்பாடு உனக்கே பத்தாதுப்பா எனக்கு வேனாம் நீயே சாப்பிடு. ஏ வா வினோத் சாப்டலாம். உக்காரு நான் எப்பயுமே மதியம் கொஞ்சமாத்தான் சாப்புடுவேன் சரிப்பா நீ ரொம்ப ஆசப்படுர சாப்டலாம். என்னா சாப்பாடு கொண்டு வந்த? தக்காளிக்கூட்டும் அரவரக்கா வெஞ்சனமும் கொண்டு வந்தே நீ சாப்புடுவலே அட நீ வேர நான் என்னா சாப்பாடாயிருந்தாலும் சாப்புடுவேப்பா! சரி இந்தா நீ பாதி நான் பாதி என்று பிரித்து மதிய உணவை முடித்தனர். இப்படியாய் தினம் தினம் என்று மலர்ந்த உறவு இருவரையும் பாலினப்பேதமின்றி பழக வைத்தது.
வினோத் சற்று விளகி இருந்துதான் பழகுகினான். ஆனால் பிரியங்காவின் கனவில் நினைவில் என எல்லாவற்றிலுமாய் இவனாகவே நிறைந்து வழிந்தான். சில நாட்களில் இவள் ஆசையாக நெருங்கும் போதெல்லாம் வேறு ஏதோ கோவத்தில் இருப்பவன்போல தன்னை மாற்றிக் காண்பித்து அவளை ஏமாற்றி நடித்து வந்தான். அவள் அருகில் நெருங்கும் போதெல்லாம் மூஞ்சியைத் தூக்கி வைத்துக் கொள்ளும் இவனைக் காணும் போதெல்லாம் சரி ஏதோ கோபத்தில் இருக்கிறாநென்று புரிந்து கொள்ளும் பிரியங்கா விளகி நின்ற நாட்க்கள் அதிகமாகவே உண்டு. ஒரு நாள் கல்லூரிப் படிவாசலில் அமர்ந்திருந்தவள் முன்னே வந்து கொண்டிருந்தவனை ஏ வினோத் இங்க வா! இங்க வாடா! என உரத்து சப்தமிட்டு அறட்டி கூப்பிட்டாள்.
பக்கத்தில் வேறு யாரும் இருக்கிறார்களா என்று சுற்று முற்றும் திரும்பிப் பார்த்தவன் மெல்லமாக நெருங்கி வந்து என்ன பிரியங்கா சொல்லு ஏன் இன்னிக்கு இவ்ளோ கோவமா இருக்க? என்னாச்சு உனக்கு? என்றதும் எனக்கொன்னுஆகல உன்கிட்ட நான் தனியாப் பேசனும். ஒன்றும் புரியாதவன் போல நின்றவன். ஏன்? பிரியங்கா என்னா பேசப்போற? ஏன் நீ இன்னிக்கு இவ்ளோ கோவமா இருக்க உனக்கு என்னாச்சு என்று மறுபடியும் அலுத்திக் கேட்க்கவும், கோவம்லா இல்ல என்று லேசாக உதடசைத்துச் சிரித்தவள். சும்மாதான் வினோத் மனசுக்குச்சரில்ல அதான் உன்கிட்ட நான் தனியாப் பேசனும் அப்பிடியென்னா முக்கியமான விசயம் பேசப்போற?
அதெலாம் உனக்குத் தேவையில்ல நான் பேசனுன்னா பேசனும். நீ வரமுடியுமா முடியாதா? என்னா விசயம்ன்னு சொல்லமாட்ற சரி பரவால்ல பேசலாம். ஆனா!... என்னா ஆனா ஈனான்னு இழுக்குற? இல்ல எங்கபோயி பேசலான்னு யோசுச்சே. ஆமா> யோசிக்கிர மூஞ்சப்பாரு! ஏம்ப்பா நாங்கலாம் யோசிக்கக் கூடாதா? சரிப்பா… நீங்களே யோசுச்சு சீக்கிரமா ஒரு நல்ல முடிவாச் சொல்லுங்க. இல்ல பிரியங்கா இங்கதான் எங்க பாத்தாலும் ஆளுங்கலா இருக்காங்கலே வேர எங்கயாவது போயி பேசலாமா?. ஆமா வெளிய எங்கயாவதும் போயித்தான் பேசனும். இம்> ஒரு ஐடியா வினோத் நாளைக்கு நம்ம வெளிய எங்கயாவது ஒரு பூங்காவுக்குப் போகலாமா? வேனாம்பா இங்கயே எங்கயாவதும் ஒரு மூளையில உக்காந்து பேசலாமே! டே மரமண்ட அத இங்க வச்சுப் பேசமுடியாது புருஞ்சுக்கோ.! ஓ அவ்லோ பெரிய முக்கியமான விசயமா? சரிப் போகலாம் ஆனா பணத்துக்கு என்னாபண்ண? அதநான் பாத்துக்கிறேன் நீ மட்டும் நாளைக்கு ரெடியாகி நேரத்துக்கு வந்துசேரு சரியா?
ம்… சரிப்பா வரேன். இன்னொரு விசயம் எப்பயும்போல ஏழ்றப்பசுக்கு வந்து பஸ்டாண்ல எறங்கி மீனாட்சியம்மன் கோவிலுக்குப் போயிட்டு அப்பிடியே அங்கயிருந்து மேட்ரூர் அணைக்குப் போகலாம் சரியா! எனக்கு இப்பிடி யார் கூடயும் போயி பலக்கமில்லயே! யாராதும் பாத்து எங்க வீட்டுல சொல்லிட்டாங்கனா என்னா பன்ன? எனக்குப் பயமா இருக்குப்பா வேணாம். அடேங்கப்பா ஓவரா சீன் போடாதடா இதெல்லாம் நான் சொல்ல வேண்டியது நீ சொல்லிட்டு இருக்க. சரிப்பா போலாம் உனக்காக வரேன். பாவம் தெனாமும் சோறுவேற குடுத்து வளக்குற நீ கூப்புட்டு வராம இருந்தா எப்பிடி சரி வரேன்ப்பா போகலாம். ஆமா கோவிலுக்கு எதுக்கு போரம்? அதஅங்கவந்து கேழு சொல்ரேன், இல்ல எனக்கு இப்பயே தெரிஞ்சாகனும். அப்படியா?. ஆமா அப்பிடித்தான்.
சரி சொன்னாப்போச்சு அங்க நெறயா பொங்கச் சோறு தருவாங்க அதவாங்கி வாங்கிட்டுப்போயி மதிய சாப்பிட்டுக்கு வச்சுக்கலாம்லே அதான். என்னா காமெடி பன்றயா? அப்றம் என்னாடா? நீதான சின்னப்புள்ளத்தனமா கேக்குற? எல்லாரும் கோவிலுக்கு எதுக்குப் போவாங்க எல்லாரையும் மாதிரி நம்மலும் போயிட்டு சாமியக் கும்மிட்டுட்டு வரலாம். நா ஏதுக்கு முதல்ல கோவிலுக்குப் போகலான்னு சொல்ரேன்னா மொத மொத நம்ம ரெண்டுபேரும் வெளிய கௌம்புறம் ஒரு நல்ல விசயம் வேற பேசப்போரம் மங்கலகரமா இருக்கனும்லெ அதான் வேற ஒன்னுமில்ல! ஓ! அப்பிடியா வர வர நீயும் நல்லாத்தான் யோசிக்கிர பிரியங்கா.
சரி காலையில மறந்துராத எப்பயும் போல வந்துரு பாக்கலாம். வீட்டிற்கு வந்தவள் இரவு எப்போது விடியுமென்று காத்திருந்தாள் அருகிலிருந்த நோட்டை எடுத்து அதில் ஒரு இதயம் வரைந்து அம்பைப் பாயவிட்டு இரண்டு மூன்று இரத்தக் கண்ணீரையும் சிந்தவிட்டு நடுவில் வினோத் பிரியங்கா என்று எழுதி அழகு பார்த்துக் கொண்டிருந்தாள். நாளைக்கு என்னா பேசலாம் என்று ஒரு குட்டிக்கணக்கையும் போட்டு மனதைக் கொழப்பிக் கொண்டிருந்தாள்.
கட்டிலில் கிடந்த தலையனையை மார்போடு அணைத்து பிடித்து வினோத் வினோத்தென்று புளம்பிக் கொண்டுமிருந்தாள். அவனிடம் மனம் விட்டுப்பேச அந்த இரவில் தன்னைத் தயார் செய்து கொண்டிருந்தாள். பக்கத்து அறையில் சில நாட்க்கள் கழித்து எல்லாரும் தூங்கியிருப்பார்கள் என்ற நெனப்பில் பாண்டியும் பரிமிளாவும்; ஒதுங்கியிருந்தனர்.
நடுச்சாமம் ஆகிவிட்டது தூங்குவதற்கு முன் கொள்ளைக்குப் போய் வரலாமென்று சென்றவளின் காதுகளை சற்று பதம் பார்த்தது அண்ணனின் அறையிலிருந்து வெளிவந்த கட்டில் சத்தம் பாண்டி அன்று கொஞ்சம் போதையில் இருந்தான் ஆகவே வீட்டில் மற்றவர்கள் இருக்கிறார்கள் என்பதை மறந்து விட்டான். பரிமிளாவும் கோவத்தில் ஊருக்குச் சென்றுவிட்டு சில நாள் கழித்து வந்த முதல் நாளே உறவு நீடித்ததாலும் இளவயதென்பதாலும் தன்னை மறந்து விட்டாள். ஊரே அமைதியாக இருந்த அந்த நடு ராத்திரியில் தன் காதுகளைத் தொட்ட சத்தம் பிரியங்காவின் உணர்வுகளைச் சற்று தீண்டிப்பார்த்தது.
அதே நெனப்பில் உறங்கியவளை கொள்ளைப்புறமாய் உள்ளே வந்த வினோத் எழுப்பாமலேயே கட்டிலில் படுத்து போர்வையை இழுத்து மூடியதில் அவளில் பற்றி எரிந்த அந்தக் காம நெருப்பு கொஞ்சம் கொஞ்சமாய் அனையத் துவங்கியது ஸ்…ஆ ஓ…. போதுன்டா விடுடா என்று புளம்பிக்கொண்டிருந்த வேளையில் ஆறுமணியாகிவிட உள்புறமாய் பூட்டியிருந்த கதவை டொக்… டொக்… கென்று தட்டி
பிரியங்கா… எழுந்திரிமா! நேரமாகிருச்சு என்ற பாண்டியின் சத்தம் அவள் காதில்பட அய்யய்யோ எந்திரிடா எங்க அண்ணா! வந்துட்டான்னு ஆடைகளைச் சரி செய்து வினோத்தை விசும்பி எழுந்தரித்து லைட்டைப்போட வினோத்தைக்கானம் பின்புதான் புரிந்தது கனவென்று எப்பா நல்லவேளைக்கு கனவா நான் கூட நிஜம்; நெனச்சுப் பயந்துட்டே கனவுலயே இப்பிடின்னா நெசத்துல எப்பிடியிருக்குமின்னு தானாகப் பேசிச் சிரித்தவள் அண்ணா நான் எந்துருச்சுட்டேன். என்ற சப்தத்தோடு கொள்ளைக்குச் சென்று வந்துவிட்டு குழித்து முடித்து தயாரானால்.
இந்தாமா டீ எடுத்துக்கெ என்ற முனியம்மாள் காலை உணவையும் எடுத்து வைத்து மதிய உணவையும் பையில் வைத்துக் கொடுத்தாள் அரைகுரையாக சாப்பிட்டவள் சரிமா நான் கௌம்புறேன் என்றதும் இந்தாமா செலவுக்கு வச்சுக்கோ என்று உள்வீட்டிலிருந்து வந்த இராசையா நூறு ரூபாய் குடுத்து பாப்பாவ சைக்கிள்லெ ஏத்திட்டுப்போயி பஸ்டாண்டுலெ எறக்கிவிட்டுட்டு வாடா பாண்டி என்றதும். சரிங்கப்பா என்று பிரியங்காவை பஸ் ஏற்றிவிட்டுத் திரும்பினான். முன்னத்துப் படியின் பக்கத்தில் இவளும் பின்னத்துப் படியின் பக்கத்தில் அவனுமாய் இருந்த இருவரும் கண்களாலே சாடை மாடையாய் சரித்துக் கொண்டும் முறைத்துக் கொண்டுமாய் பேசிக்கொண்டு வருவதை பிரியங்காவின் பெரியப்பா செல்லையா பார்த்துவிட்டு கண்டும் காணாதவருமாய்; இருந்தார்.
தொண்டையூர் வந்துவிட்டது எல்லோரும் இறங்கினர். புது ஆடையில் வந்திருந்த பிரியங்காவை நெருங்கியவன் ஏ! நீ இன்னிக்கு ரெம்ப அழகா இருக்கப்பா! இன்னிக்கு எதும் முக்கியமான நாளா? அப்பிடிலாம் ஒன்னுமில்ல வினோத் இந்த டிரெஸ்ச இன்னிக்குப்போடனும் போல இருந்துச்சு அதான் போட்டுருக்கேன். வேர ஒன்னுமில்ல என்று பேசிக்கொண்டே நகர்ந்தவர்கள் வழக்கமாகச் செல்லும் வழி மாறி வேறு பாதையில் சென்றனர். அதையும் நோட்டமிட்ட செல்லையா பெரிதுபடுத்தாமல் சென்றுவிட்டார். கோவில் வந்துவிட்டது பூசாரியிடம் காணிக்கை கொடுத்து இருவரின் பெயரிலும் அட்ச்சனை செய்து சாமி கும்மிட்டு முடித்துவிட்டு அருகிலிருந்த யானைக்கு சில்லரை குடுத்து ஆசிர்வாதம் வாங்கித் திரும்பினர்.
மேட்டூர் அணைக்குச் செல்லும் சிற்றுந்து தயாராக இருந்தது இருவரும் விரைந்து ஏறினர் அங்கு யாருமில்லாமல் இருந்த இருக்கையில் அமர்ந்தவள் வா வினோத் நீயும் இந்த இருக்கையிலேயே உக்காரு என்றாள். சற்று திகைத்துப் போனவன் வேனாம்ப்பா அது தப்பு. நான் பின்னாடி உக்காந்துக்கிறேன். என்றதும் இப்ப நீ ஏம்பக்கத்துல உக்காரப் போரயா? இல்லயா? என்று மெல்லமாகக் கடிந்ததும் வேறு வழியின்றி உக்கார்ந்தான் முதல் முறையா நம்ம ரெண்டு பேரும் ஒரே சீட்டுல உக்காந்து போரொம் இல்லயா வினோத்?
ஆமா இதயாராவதும் பாத்தா என்னா ஆகும் பிரியங்கா? அப்பிடிலாம் ஒன்னு ஆகாது நீ பயப்புடாம ஆம்பலப்பய மாதிரி இரு. இப்ப ஏ இப்பிடி பயந்து சாகுர ஆமா பயப்புடாம என்னா பன்னச் சொல்ற நீ என்னா சாதாரன வீட்டுப் பொன்னா நம்ம ஊர்லயே உங்க வீடுதா பெரிய வீடு உங்க அப்பாதா ஊர் நாட்டாமை அப்றம் எப்பிடி பயப்புடாம இருக்கச் சொல்லுர? அதலாம் ஒன்னு ஆகாது பயப்புடாத சரியா? சரிப்பா எதும் விள்ளங்கம் வராம இருந்தா சரித்தே. அணை வந்துருச்சு எறங்கு.
எறங்கி அணைக்குள் சென்றனர் அங்கு அங்குமிங்குமாய் இருந்த கல் இருக்கைகளையும் மர நிழல்களையும் சில புதர்களையுமென அழங்கரித்து சுற்றிச் சுற்றிப் பூக்கள் போல சிலர் பூத்திருந்தனர். இவர்களுக்கும் ஒரு மறைவு கிடைத்துவிட அமர்ந்தனர். எதை எதையோப்பேசி சம்பந்தமின்றி சந்தோசமாக சிர்த்துக்கொண்டிருந்தனர். விளையாட்டுத்தனமாக இருவரின் கரங்களும் அடித்துப் பிடித்துமாய் விளையாடிக் கொண்டிருந்தன.
சற்று நேரத்தில் அமைதியான பரியங்கா வினோத் நான் உன்ன காதலிக்கிறேன். என்றதும் இடி விழுந்தவன்போல ஒன்றும் புரியாதவனாய் நின்றவன். என்னா பிரியங்கா நீ இப்பிடி சின்னப்புள்ள மாதிரி பேசுற வேனாம் பிரியங்கா! என்று பின்னே தள்ளிச் செல்ல இல்லடா வினோத் உன்ன என்னால மறக்க முடியல இதச்சொல்லத்தான் உன்ன இங்க கூப்பிட்டு வந்தேன் என்று அழுது கொண்டே நெருங்கினாள்.
அவனின் மார்பில் சாய்ந்து சட்டையைப் பிடித்து அழுதாள் வேறு வழியின்றி கண்ணீரைத் துடைத்துவிட்ட அவனது கரங்கள் போல அவனது இதயமும் அவளது காதலை ஏற்றுக் கொண்டன. இருந்தாலும் மறைத்தான் தன் பிறந்த ஊருக்குப் பயந்தான். மலுப்பினான் இல்லப்பா வேண்டாம் நாங்க வேற நீங்க வேற என்று பிரித்து விளக்கிச் சென்னான் அதை எதையுமே கேட்க்காதவளாக அவனது முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தவள் அவனது கன்னத்தில் ஒரு முத்தத்தைப் பரிசாக்கினாள். அது அவனை இனிமை படுத்தவில்லை யோசித்துக் கொண்டே நின்றான். அவளது விழிகள் கண்ணீர் சிந்த ஆரம்பித்தது சரி அழாதப்பா என்று சமாதனப்படுத்தினான் முடியவில்லை.
எனக்கு இப்பயே உன் முடிவச்சொல்லு நீ சரின்னுசொன்னா மட்டுந்தான் உங்கூட வருவேன் இல்லனா இந்த அணையிலயே விழுந்து செத்துருவேன் என்றதும்> அப்படியெல்லாம் தயவு செய்து அப்பிடிலாம் பேசாத என்று அவளின் காதலை ஏற்றுக்கொண்டான். நகைக்க ஆரம்பித்தாள் நகைத்தாள் சுறுசுறுப்பானாள் சந்தோசாக இருவரும் பேசிக்கொண்டிருந்தனர் உச்சி வெயில் மண்டையைப்பிளக்க அருகிலிருந்த சவுக்கமர நிழலில் ஒதுங்கினர் தன் பையிலிருநந்த உணவைத் திறந்தாள் இருவரும் மாறி மாறி ஊட்டிவிட்டு உண்டு மகிழ்ந்தனர்.
அணையை மெதுவாக ஒருமுறை சுற்றி வந்தனர். மணி நான்காகிவிட்டது போதும் பிரியங்கா கௌம்பலாம் என்றதும் நான் இன்னிக்கு ரெம்ப ரெம்ப சந்தோசமா இருக்கெ வினோத் சரிப்பா… நான் சொல்ரதக்கேழு நம்ம இப்ப போனாத்தான் நம்மூரு பஸ்ஸப் பிடிக்க முடியும் அதவிட்டா சிக்ககலாகிரும் வா கௌம்பலாமென்றான் அவளும் சம்மதித்தாள் மினி பஸ் ஏறிக்கிளம்பினர் தொண்டையூரிலிருந்து கருக்கம்பட்டி பஸ் ஏறி முன்புறம் அவளும் பின்புறம் இவனுமாய் இருந்தனர். பேருந்து வழக்கம்போல ஊரில் இறக்கிவிட்டுச் சென்றது.
இப்படியாத் தொடர்ந்த பழக்கம் ஆறுமாத காலமாய்ச் சென்று கொண்டிருந்தது. இவள் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது பாண்டி அப்பாவிடம் சொல்லி வைத்தான். அதை இராசையாவும் முனியம்மாளின் காதில் சொல் வைத்தார், அதைக்கேட்ட முனியம்மா பிரியங்கா சின்னப்புள்ளங்க அவளுக்கு என்னா தெரியும் அவள நான் பாத்துக்கிறேன் நீங்க உங்க வேலையப்பாருங்க என்று பரியங்காவை கண்டிக்க விடாமல் தட்டிக் கழித்துவிட்டாள்.
ஒருநாள் இரவில் தன் அப்பா தோட்டக் காவலுக்குச் சென்றுவிட வேலை செய்த களைப்பில் தூங்கிக் கொண்டிருந்த அம்மாவைத் தட்டி எழுப்பினாள் என்னாடி இந்த இராத்திரியில எழுப்புற வயித்துக்கு எதும் சேரலயா? அந்த பேட்டரிய எடு என்ற புளம்பலோடு எழுந்து தலைமுடியை வாரிக்கட்டியவளின் கால்ளை இருக்கமாகப் பற்றி என்னைய மண்ணிச்சுருமா! மண்ணிச்சுருமா! என்று அழுததைப்பார்த்து ஏ கழுத எதுக்கு அழுகுர என்னான்னு சொல்லு எந்திரி எந்திரி என்றதும் நான் சொன்னா நீ என்ன மண்ணிச்சுருவயாமா என்று தேகரித்தவளை சொல்லுமா என்று கண்ணீரைத் துடைத்துவிட்டாள். அழுது கொண்டே இருந்தவளை சப்பின்னு அறயப்போறபாரு என்னான்னு சொல்லு என்றதும். வாயடைத்து நின்றவள் ஓரிரு நிமிடம் கழித்துப்பேசினாள்.
நானும் கிழக்குத் தெரு வினோத்தும் காதலிக்குறொம்மா எப்பிடியாவதும் அப்பாவுக்குத் தெரியாம எங்களச்சேத்து வச்சுரும்மா. அடிப்பாவி மகளே என்னடி இப்பிடிச்சொல்ற அவங்க என்னா சாதி? நம்ம என்னா சாதி? என்று கேட்டவளின் மேனி வேர்த்து விருவிருத்துப்போனது. வேணாம்மா அந்த பேச்சப்பேசாத உனக்கு நம்ம சாதயில நல்ல பயனப்பாத்து அம்மா கல்யாணம் பன்னி வைக்கிரேன். அந்த பயன மறந்துருமா என்றதும் இல்லமா நான் இல்லனா அவெசெத்துருவாம்மா பாவம்மா!
வேனாம் பரியங்கா இதஇப்பிடியே விட்டுரு இதுமட்டும் உங்க அப்பாவுக்கு அண்ணனுக்குத் தெருஞ்சதுன்னா உன்னயும் கொண்டுருவாங்க அவனயும் கொண்டுருவாங்க வேனாம் பிரியங்கா இனிக்கோட எல்லாம் முடுஞ்சுபோச்சு நாளைக்கு விடியிர பொழுது நல்ல பொழுதா இருக்கனுன்னு நெனச்சுக்கிட்டு தூங்குமா> என்று தலையைவருடியவாறு தூங்க வைத்தாள்.
காலை விடிந்தது தோட்டக்காவலுக்குப்போன கணவன் வந்ததும் காப்பியைக் கையில் கொடுத்தவள் விசயத்தைச் சொல்லிவிட்டாள். ஏ! நாயே உனக்குச் செல்லங்குடுத்து வளத்ததுக்கு நீ இந்தக் கரியமா பன்னிட்டு வந்துருக்க என்று ஓடிக்கதவை எத்தப்போனதும் முனியம்மா காலைப்பிடித்து கெஞ்சி தடுத்து விட்டாள். சத்தம் கேட்ட பாண்டியும் பரிமிளாவும் விரைந்து வந்தனர். விசயத்தை நால்வரும் பேசி முடித்து தங்களுக்குள்ளாக இரகசியப்படுத்திக் கொண்டனர். காலையில் எழுந்து சோகமாக வந்தவளை வீட்டில் யாரும் கண்டுகொள்ளவில்லை கல்லூரிக்குக் கிளம்பினாள் பையை வீட்டுல வச்சுட்டு வீட்டு வேலையப்பாருமா படிச்சுக்கிளிச்சது போதுமின்னு சொல்லிவிட்டு டீக்கடைப்பக்கமாக இராசையா சென்றுவிட நீ இனிமேலு வீட்ட விட்டுவெளிய போறதப் பாத்தேன் உங்கால வெட்டிருவேன்னு பாண்டி ஒருபுறம் முறைத்தான்.
முனியம்மாளும் பரிமிளாவும் எடுத்துச் சொன்னதைமீறி கல்லூரிக்குச் சென்று வீட்டில் நடந்த விசயங்களை வினோத்திடம் சொல்லி அழுதுகொண்டிருக்க கல்லூரிக்குள் வேகமாக வந்துநின்ற காரிலிருந்து இறங்கிவந்த இராசையா வாமா வீட்டுக்குப்போகலாமென்று கையைப்பிடித்து இழுக்க வினோத் ஒருகனம் பயந்து பின்தள்ளி நின்றான். பின்னால் வந்த பாண்டி தப்பிச்சுப்போயிரு இனிமேல் எங்க பாப்பாகூட பேசனும் பழகனும்ன்னு நெனச்செ அப்றம் உங்க அப்பா அம்மாக்கு நீ பேர் சொல்லமாட்டன்னு சொல்லிட்டு காரில் ஏற விரைந்து சென்ற கார் தொண்டையூர் மீனாட்சியம்மன் கோவிலில் நின்றது.
இராணுவத்திலிருந்து விடுமுறைக்காக வந்திருந்த முனியம்மாளின் தம்பி புதுமாப்பிள்ளையாக சோடிக்கப் பட்டிருந்தான். கோவில் வாசலில் நின்றிருந்தவனைப் பார்த்த பிரியங்கா மாமாவுக்கு கல்யாணம்போல என்று என்னிக் கொண்டு கோவிலுக்குள் வந்தாள் அங்கிருந்த ஒரு அறையில் புதுப்பெண்ணாக அலங்கரிக்கப்பட்டு ஒரு மணிநேரத்தில் திருமணம் நடந்து முடிந்தது.
அன்று மாலையிலேயே கிளம்பிய கார் கேரளாவிற்குச் சென்றது. மூன்று மாதப் பொழுதுகளைக் கேரளாவில் கழித்த இளம் சோடியை ஏற்றிக்கொண்டு தமிழகம் வந்த கார் இராசையாவின் வீட்டுமுன் நின்றது வாங்க மாப்புள வாங்க வாங்க என்று வரவேற்றனர். நாட்டுக்கோழி கொளம்பு இளம் வெள்ளாட்டுக்கறியென்று இரண்டு நாள் விருந்தோடு பொழுது கழிந்தது. விடுமுறை நாட்க்கள் முடிந்தது விரைவில் பணிக்கு வாருங்கள் என்று இராணுவ உயரதிகாரியிடமிருந்து வந்த மடலை அக்கா மாமாவிடம் காட்டிவிட்டு கிளம்பத்தயாரானான்.
அப்பனா பாப்பா எப்பிடி மாப்ள என்று இழுத்த பாண்டியை பார்த்து அவன் என் மனைவிடா ஏங்கூடதான் இருப்பா. பிரிங்கா வாயிம்வயிருமா இருக்காப்பா பாத்துவச்சுக்கெ! தங்கம் என்றதும் சரிக்கா அவ என்னா அங்க வந்து வேலைக்கா போகப்போறா வீட்டுலதா இருப்பா நீங்க பயப்புடாதிங்க என்று சொல்லி முடித்து பஸ்சுக்கு நேரமாகிருச்சு பிரியங்கா கௌம்பிட்டயா? என்றதும் இம்… கௌம்பிட்டே மாமா என்று பைகளை எடுத்துக்கொண்டு தயாராகிக் வந்தாள். அன்றைய தினம் பேருந்து சற்று தாமதமாகவே வந்தது முன்னத்துப்படிகளில் வினோத்தும் கமலாவும் இறங்க பின்னத்துப்படிகளில் தங்கமும் பரியங்காவும் ஏறினர்.

எழுதியவர் : பெரு.பழனிச்சாமி (15-Dec-16, 1:30 pm)
பார்வை : 166

மேலே