அவசர சிகிச்சை
![](https://eluthu.com/images/loading.gif)
இரவு நேரம் பண்ணிரெண்டு. ஜோகூர் பாருவிலிருந்து கோலாலம்பூர் செல்லும் வடக்கு தெற்கு நெடுஞ்சாலை. வாகனத்தில் சிட்டாக அதிவேகத்தில் பறந்து கொண்டு இருந்தன. ஜேம்ஸ் தன் BMW காரில் அதி வேகத்தில் 200KM/h செலுத்தி கொண்டு இருந்தான். கண்களில் தூக்க வெறி வேறு. திடீரென்று குறுக்கே வந்த மோட்டார் சைக்கிளில் மீது இடித்து பறந்தது. சம்ஸ் தன வாகனத்தை நிறுத்தாமல் அவன் பயந்தவாறே வாகனத்தின் கண்ணாடியில் பின்னால் என்ன நடந்திருக்கும் என்று வாகனத்தை ஓட்டி கொண்டே பார்த்தான். புதரில் தூக்கி எரிய பட்டிருந்ததை போல் தெரிந்தது. நிச்சயம் உயிர் பிழைக்க சாத்தியம் இல்லை. இதை பற்றி காவல் நிலையத்தில் தெரிய படுத்தினால், தான் மது அருந்திவிட்டு வாகனம் செலுத்தியது தெரிய வரும். பேசாமல் அமைதியாக இருந்து விடலாமென்று தன்னுள் நினைத்து கொண்டான். காய் நடுக்கம் இன்னும் நிற்கவேயில்லை.
ஜேம்ஸ் ஒரு நிறுவனத்தில் நிர்வாக தலைமை அதிகாரியாக பணியாற்றுகிறான். அவன் சந்திக்காத மனிதர்களே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும், என்றும் வாழ்வில் பரபரப்பான மனிதர் ஜேம்ஸ். இன்று அவனின் வாழ்வில் முக்கியமான நாள். ஆம், இன்று சிறந்த தலைமை நிர்வாகி என சிறப்பு செய்து விருது வழங்கும் நாள். அந்த விருந்தில் மது அருந்திவிட்டு தாமதமாக வீடு செல்ல வேண்டியிருந்தது. எல்லாம் முடிந்த பின்னர் வீடு திரும்பும் நேரத்தில்தான் இந்த அசம்பாவிதம் நேர்ந்தது.
மறுநாள் காலையில் அங்கே நடந்த விபத்தை பற்றி ஏதேனும் தகவல் உண்டா என தகவல் ஊடகங்களில் தேடி பார்த்தான். விபத்து நடந்ததற்கான தகவல் ஏதும் இல்லை. இருப்பினும் அவனின் பய நடக்கம் மட்டும் இன்னும் போகவே இல்லை. அன்று நிறுவனத்திற்கு செல்லவில்லை. வீட்டுக்குள்ளேயே அன்றய பொழுதை கழித்தான். நாளை மறுநாள் நிறுவனத்துக்கு சென்றான். நாளிதழ்களில் ஏதேனும் தகவல் உண்டா என்று பார்த்தான். தென்பட்டது விபத்து என்று, தொடர்ந்து படித்தான். பெரு மூச்சு விட்டான். அது ஜேம்ஸ் ஏற்படுத்திய விபத்து இல்லை.
நான் விபத்து ஏற்படுத்தியது உண்மைதானா இல்லை பொய்யா என்ற கேள்விக்கு நிலையானான். வெளியே நிறுத்தி வைத்திருந்த தன வாகனத்தை போய் பார்த்தான். இடித்திருந்த இடத்தில சாயம் போய் சற்று தேய்ந்தும் இருந்தது, விபத்தானது உண்மைதான் அப்போ அந்த ஆளுக்கு என்ன ஆகியிருக்கும், ஒரு தகவலும் தெரியவில்லையே. போலீசுக்கு தெரியாமல் இந்த விஷயத்தை சரி செய்தாக வேண்டும். தானே அந்த இடத்துக்கு செல்ல இயலாது, சந்தேகம் உண்டாகும். ஆகவே ஜேம்ஸ் ஒரு யோசனை தோன்றி உடனே துப்பறியும் முகவரான கிறிஸ்டோபரை அலைபேசி மூலம் தன் நிறுவனத்துக்கு வரவழைத்தான்.
கிறிஸ்டோபர் ஒரு துப்பறியும் இலாகாவை சேர்ந்த முகவர். ஜேம்ஸ்க்கு மிகவும் நெருங்கிய நண்பனும் கூட. தொழிலதிபர்கள், மந்திரிகள் போன்ற முக்கிய பிரமுகர்களின் வழக்குகளை மிக சுலபமாகவும் சுமுகமாகவும் முடித்து கொடுத்திருக்கிறான். பல முக்கிய பிரமுகர்களின் தப்பு தாளங்கள் கிறிஸ்டோபரின் கையில். ஆதலால் முக்கிய பிரமுகர்களின் மத்தியில் கிறிஸ்டோபருக்கு தனி வரவேற்பு உண்டு. ஜேம்ஸ் அவனை மிக ரகசியமாக சந்தித்து நடந்தவற்றை சொன்னான். கிறிஸ்டோபர் உடனே தன் துப்பறியும் வேலையை ஆரம்பித்துவிட்டான். அணைத்து மருத்துவமனைகளிலும் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நபர்களை ஆராய்ந்தான். அவர்கள் யாரும் ஜேம்ஸ் சொன்ன விசயத்துக்கு ஒப்பாகவில்லை. காவல் நிலையத்திலும் கோப்புகளை சோதணை செய்து பார்த்து விட்டான், அங்கேயும் எதுவும் பதிவாகவில்லை. இதை அனைத்தையும் ஜேம்ஸ்சிடம் தெரிவித்தான்.
"எப்படிடா ஒரு இடத்திலும்கூட விபத்து பதிவாகவில்லையா?" என்றான் ஜேம்ஸ்.
"ஆமாம் ஜேம்ஸ், இதோடு இந்த கோப்புகளை மூடிவிட போகிறேன். இது ஒன்றுமே இல்லாத விஷயம்." என்றான் கிறிஸ்டோபர்.
அடுத்த நிமிடம் ஒரு தபால்காரன் தபாலை ஜேம்ஸ் வீட்டு வாசலில் தொங்கிய தபால் பெட்டியில் போட்டு சென்றான். ஜேம்ஸ் உடனே இறங்கி சென்று பிரித்து படித்தான். அந்த கடிதத்தில் கவலை வேண்டாம், நீங்கள் இடித்து சென்ற ஆள் என் பாதுகாப்பில் தான் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்க பட்டிருக்கிறார். நீங்கள் எங்கு தேடினாலும் அவரை கண்டு பிடிக்க இயலாது. எந்த மருத்துவமனையிலும் அவருடைய பெயர் பதிவு செய்ய பட்டிருக்காது. நீங்கள் பயப்பட வேண்டிய அவசியமில்லை. ஆனால் எனக்கு உங்களிடம் இருந்து ஒன்று தேவை படுகிறது. அதை நீங்கள் கொடுத்து விட்டால் எந்த பிரச்சணை இன்றி சுமுகமாக முடிந்துவிடும். சரி என்றால், தனியாக KPJ மருத்துவமனை கோலாலும்பூருக்கு வாருங்கள். கிறிஸ்டோபர் அதை வாங்கி படித்து விட்டு, முதலில் அதிர்ந்தான். பிறகு சுதாரித்து கொண்டு, "எனக்கென்னமோ இதை செய்வது ஒரு மருத்துவராகத்தான் இருக்க வேண்டும். அதுவும் KPJ மருத்துவமனை மருத்துவராக தான் இருக்க வேண்டும். உனக்கு நன்கு அறிமுகமான ஒரு நபராகத்தான் இருக்க வேண்டும். ஏனெனென்றால் நான் எல்லா மருத்துவமனை பதிவேட்டில் நான் சோதனை செய்து பார்த்து விட்டேன், அதையும் மீறி பதிவு செய்யாமல் ஒருத்தரை சிகிச்சை அளித்து வருகிறாரார்கள் என்றால், உன்னை குறி வைத்து எதோ ஒன்றுக்காகத்தான். கண்டிப்பாக உனக்கு நன்கு அறிமுகமான நபர்தான் இதை செய்கிறார்கள். உனக்கு தெரிந்தவர்கள் யாரவது அங்கே வேலை செய்கிறார்களா ஜேம்ஸ்". என்றான்.
"எனக்கு சரியாக தெரியவில்லை, அப்படியே இருந்தாலும் எதற்காக என்னை மிரட்டி கடிதம் எழுத வேண்டும், ஒரே குழப்பமாக இருக்கிறது". என்றான் ஜேம்ஸ்.
"ஜேம்ஸ், வா KPJ மருத்துவமனைக்கு கிளம்பலாம். என்றான் கிறிஸ்டோபர். இருவரும் சென்றனர், அங்கே சென்ற பின்னே கிறிஸ்டோபர் ஜேம்ஸ்சை உள்ள அனுப்பிவிட்டு தூரத்தில் இருந்து ஜேம்ஸ்சை கண்காணித்து கொண்டு இருந்தான். மருத்துவர் பிரிவிலிருந்து ஒரு பெண் மருத்துவர் ஜேம்ஸ்சை நோக்கி வந்து கொண்டிருந்தாள். கிட்ட வர வரத்தான் தெரிந்தது அவள் கல்லூரி தோழி ஜெயா என்று.
"எப்படி இருக்க ஜேம்ஸ். என்றால் ஜெயா.
"நான் நல்ல இருக்கேன். நீதான் எனக்கு கடிதம் அனுப்பினியா" என்றான் ஜேம்ஸ்.
"ஆம் ஜேம்ஸ். நான்தான்" என்றாள் ஜெயா.
"எதற்கு இப்படி செஞ்ச" என்றான் ஜேம்ஸ்.
"நீ எனக்கு செஞ்சதவிடவா" என்றால் ஜெயா. ஜேம்ஸ் தலைகுனிந்தான். "நீ ரொம்பே பெரிய ஆளாகிட்டே போலிருக்கே" என்றாள்.
"அப்படி ஒன்னும் இல்ல ஜெயா. நீ இங்கதான் மருத்துவராக வேலை செய்யிறிய என்ன" என்றான் ஜேம்ஸ்.
'ஆமாம் ஜேம்ஸ்" என்றாள்.
"எப்படி உனக்கு நான்தான் அந்த இரவுல இடிச்சேன்னு தெரியும்" என்றான் ஜேம்ஸ்.
"நீ இடிச்சியே அவரோடே சிறுநீரக பையை தானம் செய்வதாக இருந்தார். ன் அப்பாவுக்கு ரொம்ப நாலா மது அருந்தும் பழக்கம் உள்ளது. நாளடைவில் அது சிறுநீரக பிரச்னை ஏற்பட்டு செயலிழந்து விட்டது. என் அப்பாவின் ரத்தம் 'O' நெகட்டிப் என்பதால் எளிதில் கிடைக்காது. அந்த நிலைமையில் தான் ராமஸ்வாமி தன் ஒரு சிறுநீரகத்தை தானம் செய்ய முன்வந்தார். அவரின் ரத்தமும் 'O' நெகட்டிப் தான். அவரின் குடும்ப கஷ்டத்திற்காக என்னிடம் தன் சிறுநீரகத்தை பல லட்சங்களுக்கு விலை பேசினார். எனக்கு அந்த அளவுக்கு பண பலம் கிடையாது. இருப்பினும் வங்கி மூலம் என் சக்திக்கு மீறிய கடனுதவி பெற்றேன். அதன் பிறகுதான் அவருக்கு அலைபேசி மூலம் தொடர்பு கொண்டு வரச்சொன்னேன். அவரை ஏற்றி செல்வதற்காகத்தான் நான் நெடுஞ்சாலையில் காத்து கொண்டிருந்தேன். அப்போதுதான் நீ அவரை இடித்து தள்ளிவிட்டு நிற்காமல் சென்றதை கவனித்தேன். நான் ஒரு மருத்துவர் என்பதால் உடனே முதலுதவி செய்து உனக்கு பிரச்சணை வராமலிருக்க எந்த பதிவும் செய்யாமல் அனுமதித்து சிகிச்சை செய்து கொண்டிருக்கிறேன். அவர் நால்லாகி வந்தால் தான் என் அப்பாவுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய முடியும். இரு உயிர்களை காப்பாற்றுவது உன் கையில் தான் இருக்கிறது. நீ இடித்து கொள்ள பார்த்தது ஒரு உயிர் இல்ல, இரு உயிர். நீ வேண்டுமானால் என் காதலை விளையாட்டா நினைத்து தூக்கி எறிந்திருக்கலாம். ஆனால் நான் என்றுமே உன் முன்னேற்றத்தை கவனித்து கொண்டுதான் இருக்கிறேன். நீ அப்பவும், சரி இப்பவும் சரி, இன்னும் திருந்தவே இல்ல லே" என்றாள் ஜெயா.
ஜேம்ஸ் தான் செய்த தவறை உணர்ந்தான். கல்லூரி நாளில் ஜெயா தன் காதலை ஜேம்ஸ்சிடம் சொல்லியபோது குடித்திருந்தான். குடி போதையில் அவள் காதலை மிகவும் கொச்சை படுத்தி அவமான படுத்திவிட்டான். மனம் உடைந்த ஜெயா கல்லூரியை விட்டே மாறிவிட்டால். ஜெயாவின் அப்பா என்னன்னா அதிகளவில் குடித்து விட்டு உடல் நலம் சரியில்லாமல் போய்விட்டது. அவளுக்கு உதவ வந்த ராமஸ்வாமியை குடித்து விட்டு இடித்து விட்டேன். அவளுக்கு மேலேயும் மேலும் நான் இடையூறுதான் செய்திருக்கிறேன். ஜேம்ஸ்சின் கண்கள் கலங்கிருந்தது.
ஜெயாவை பார்த்து, "ஜெயா உனக்கு நான் என்ன உதவி வேண்டுமானாலும் செய்ய தயார். சொல் ஜெயா" என்றான் ஜேம்ஸ்.
"ராமஸ்வாமியை காப்பாற்ற பண உதவி செய்ய வேண்டும். அவசர சிகிச்சை பிரிவில் இருக்கும் அவருக்கு முழு மருத்துவ செலவுக்கு பொறுப்பேற்க வேண்டும்" என்றால் ஜெயா.
"அவருக்கு மட்டும் அல்ல உன் அப்பாவுக்கும் மருத்துவ செலவுக்கும், நீ பட்ட கடனை செலுத்தவும் செய்கிறேன் ஜெயா" நான் உனக்கு இழைத்த கொடுமைக்கும் இடையீருக்கும் பிராயச்சித்தமாக கருதுகிறேன்" என்றான் ஜேம்ஸ். ஜெயா இருகரம் கூப்பி நன்றி தெரிவித்தாள். "நீ நன்றி சொல்ல தகுதியற்றவன் ஜெயா நான்" என்றான் ஜேம்ஸ்.
வெளியே நோட்டமிட்டிருந்த கிறிஸ்டோபர் உள்ளே வந்தான்.
"ஜேம்ஸ் இதிலுருந்து எனக்கு இரு தகவல் புலப்படுகிறது. என்ன தெரியுமா? குடித்து விட்டு வாகனத்தை ஓட்ட கூடாது.