தாயுள்ளம் வேண்டி
இருப்பதெல்லாம் தனக்கென்றால்,
பிறருக்கென எதுவுமே மிஞ்சாதே..
துன்பமும் சேர்ந்தே தனிவுடைமையாகுமே...
வாழவே பிறந்தோமே...
வாழும் வாழ்வில் ஏமாற்றுதலும், குற்றம் புரிதலும், கொள்ளை அடித்தலும், அபகரித்தலும், பதுக்குதலும் தேவையா???...
தாயுள்ளம் கொண்டு வாழ்வோமே...
இல்லாமையை இல்லாதொழிப்போமே...
துன்பமோ, இன்பமோ அனைவரும் சமமாய் பகிர்வோமே....
மரம் உட்பட அனைத்து உயிர்களுக்கும் சுவாசமாகி உயிர் வாழ வைப்பது காற்றே...
அக்காற்றே புயலானால், உயிர்களையும் பலியிடுவதோடு பொருட்களை நாசப்படுத்துவதும் சாத்தியமே....
நாம் உயிர் வாழ வைக்கும் காற்றாய் இருப்பதும்,
உயிர் பலியிட்டு, நாசம் செய்யும் புயலாய் இருப்பதும் நம் மனதின் எண்ணங்களாலேயே...
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
