உன்னைச் சரணடைந்தேன்

பகல் இரவு என‌
மாற்றுகிறாய்...
இடி மின்னல்..மழை..சூறாவளி என‌
புரட்டுகிறாய்..
ஆலங்கட்டி மழை என‌
ஆசைப்படவைக்கிறாய்...
வானவில்லுக்கு வர்ணம்காட்டுகிறாய்..
அமாவாசையிலும் அழகாகிறாய்..
பெளர்ணமியிலும் அழகாகிறாய்..
நட்சத்திரங்களால் கண்சிமிட்டுகிறாய்..
கோடையில் வெப்பமும் கக்குகிறாய்..
கோபம் வரும்போதெல்லாம் புயலாய் மாறுகிறாய்...
ஆனாலும் இயற்கையின் நீதியல்லவா இது என‌
மக்களை மடக்கிவிடுவாய்... இருப்பினும்
நீலவண்ணப் பட்டு உடுத்திய‌ வான்மகளே..
இயற்கையின் வரம் நீ...
உன்னைச் சரணடைகிறேன்..

எழுதியவர் : வே.புனிதா வேளாங்கண்ணி (16-Dec-16, 12:56 pm)
பார்வை : 114

மேலே