வாழ்கை ரகசியம்

என் பெயர் நவீன் . திருப்பூர் என்னும் மாநகரில் ஒரு
தனியார் நிருவனத்தில் பனிபுரிந்து வருகிறேன். அதே நிர்வனத்தில் பாரதி என்னும் இளைஞரும் மனிதவளத்துறையில் பனிபுரிந்து வருகிறார்.

நான் ஒவ்வொரு நாளும் கவனித்து வந்தேன். அவர் முகத்தில் சிறிப்பினையே யான் கண்டதில்லை. இவ்வாரு இருக்கையில் ஒரு நாள் விடுமுறையன்று இருவரும் சந்தித்தோம்.

அப்போது இருவரும் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டோம்.
பின்பு மெல்ல என் கேள்விகளை
எழுப்பினேன். ஏன் நீங்கள் பார்க்கும்போதெல்லாம் சோகத்தில் ஆழந்திருக்குறீர்கள் என்றேன். அவர் முகத்தை
உயர்த்தினார்... எனக்கோ மனதில்
சின்ன பதட்டம் ... பின்பு மெல்ல சிரித்தார் அப்போது தான் அவர் சிரிப்பினை முதன் முதலில் காட்சி
பெருகிறேன்... அதன்பின்பு ஒவ்வொன்றாய் விமர்ச்சிக்க ஆரம்பித்தார்... தன் பள்ளி பருவங்கள் மற்றும் கல்லூரி காலங்களிலும் நிகழ்ந்த சில சுவாரஸ்யமான நிகழ்ச்சிகளையும், பங்கேற்ற
தனித்திறமை போட்டிகளில் தான் வெற்றி பெற்ற இன்பமிக்க
நிகழ்வுகளை ஆர்வத்துடனும் மகிழ்சியுடனும் பகிர்ந்தார்...

அவர் என்னுடன் பகிர்ந்த மொழிகளைக் கேட்க என்செவிகள்
இன்பமுற்றது. ஆனால் அதற்கும் தற்போது பனியாற்றும் இடத்திற்கும் சம்பந்தமில்லை அவர் பகிர்ந்த வார்த்தைகளை
இதனோடு ஒப்பிடுகையில் அவரின் முக சோர்வு என்னுள்
விளங்கியது...
காரணம் யாது எனில்


நாம் எதைக் கொண்டு ஆர்வமாய்
இருக்கின்றோமொ அதன் பாதையில் நம் பயனத்தை
ஓட்டிக்கொண்டு செல்லுதல் வேண்டும்

மனதில் நாளுக்கு அளவில்லா
என்னங்கள் தோன்றும் அவற்றில்
சற்று கவனமாக செயல்படுங்கள்.

வாழ்க்கை வெற்றியின் ரகசியம் எதில் ஆர்வம் உள்ளதோ அதில் ஈர்ப்பு வேண்டும்... நடக்குமோ நடக்காதோ என்ற குழப்பம் வேண்டாம் நடத்திக்காட்டுவேன் என்ற மனப்பான்மை இருந்தால் போதும் .. உன் வெற்றி உனக்கருகிள்.....

இவ்வுலகில் படைக்கப்பட்ட யாவரும் கவிஞர்களேயாவார்கள், உலியைக் கையில் எடுப்பவன் தான் முடிசூடப்படுகிறான்.....




ரா. சுரேஷ்

எழுதியவர் : ரா. சுரேஷ் (16-Dec-16, 5:18 pm)
சேர்த்தது : ரா சுரேஷ்
பார்வை : 371

மேலே