படம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் படத்திற்கு ஹைக்கூ கவிஞர் இரா இரவி
படம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் !
படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
பார்க்காதவர்கள்
பாருங்கள்
தங்க ரொட்டி !
பணக்காரர்கள்
பரம்பரைக்குப் பதுக்கும்
தங்க ரொட்டி !
உண்ண ரொட்டியின்றி
சாகிறான்
ஏழை !
யாரும் உண்ணமுடியாது
பசித்தால்
தங்க ரொட்டி !
பலர் கம்பி எண்ண
காரணமாகும்
தங்க ரொட்டி !