யார் நீ
இருளில் மூழ்கிப்போவது உன்னுலகம்
இருளில் இயங்கிக்கொண்டிருப்பது
என்னுலகம் ...
பயமோ உன்னை என்னைத் தேடவைக்கும்
நானோ பயமறியாதவன்...
ஐந்திணைக்குள் ஓடிக்கொண்டிருப்பது உன் வாழ்க்கை
எத்திணைக்குள்ளும் அடங்காதவன் நான் ...
என்னை அடைய என்னை நேசிக்கின்றாய்,
உன்மேல் எனக்கு நேசமும் இல்லை வெருப்பும் இல்லை ...
உன் கர்மம் உன் கடமை,
எனக்கென்று கடமை ஒன்று இல்லை -
ஆனாலும் கர்மம் செய்து கொண்டே இருக்கின்றேன் ...
உன் அறிவு உன் எல்லை
எல்லையற்றவன் நான்...
உனக்குள் இருப்பவனோ நான் ,
ஆனால் எனக்குள் ???? :-)
நான் பிரபஞ்சம் பேசுகின்றேன் !
உனக்குள்ளிருந்து.....
இப்பொழுது சொல் ! ... நீ யார் ?
உன்னை அறிந்து என்னை அறியச்செய்வாய் !
- ஆழி