ஜன்னு தன்னு

ஏண்டப்பா மெய்யப்பா எம் மருமவளுக்கு மொதப் பிரசவத்திலேயே ரண்டு கொழந்தங்க பொறந்திருக்குது. அவுங்களுக்கு என்னடா பேரு வைக்கப் போற?
@@|@

இந்திப் பேருங்களத்தான் வச்சாகணும். அரசு சம்பளம் வாங்கிட்டு நம்ம தாய் மொழியைப் போற்றிவளர்க்கக்க வேண்டிய பதவில உள்ளவங்கள்ல 98% பேரே அவுங்க பிள்ளைங்களுக்கு இந்திப் பேருங்கள வைக்கற போது இந்தி ஆசிரியரா இருக்கற நா மட்டும் எப்பிடிமா எம் பிள்ளைங்களுக்கு தமிழ்ப்ப் பேருங்கள வைக்கிறது? அவுங்கள்ல பெரும்பாலோர் அர்த்தம் தெரியாத பேருங்களத்தான் வைக்கறாங்க. நா அர்த்தம் தெரிஞ்ச பேருங்களத்தான் எங் குழந்தைங்களுக்கு வைக்கப் போறேம்மா.
@@@@@@
ஆமாண்டா மெய்யப்பா ஊரோட ஒத்துப் போறதுதாண்டா நல்லது. பாம்பு திங்கற ஊருக்குப் போனா நடுக்கண்டம் நமக்குன்னு கேட்டு வாங்கித் தின்னறதுதாண்டா நல்லது.
@@@@@
சரிம்மா. இப்ப நம்ம பிரதமர் ஜன் தன்-ன்னு ஒரு திட்டத்தை அறிவிச்சிருக்காங்க. அதானல ஒரு குழந்தை பேரு ஜன். இன்னொரு குழழந்தை பேரு தன்.
@@@@@
என்னது ஜன்னு தன்னா?
@@@@
ஆமம்மா. ஜன்-ன்னா மக்கள். தன்-ன்னா செல்வம்.
@@@
ஓ....... அப்பிடியா. அப்ப ஜன்-ன்னு தன்-ன்னுன்னே பேரு வச்சிரு.

எழுதியவர் : மலர் (17-Dec-16, 8:07 pm)
பார்வை : 237

மேலே