தமிழில் பேச பெருமைபடு

தமிழச்சி நான் ......
நீங்கள்?
உங்கள் தாய்ப் பால்
தமிழ் என்றால்
தமிழில் பேசுங்கள்.........

~ தமிழச்சி பிரபாவதி வீரமுத்து

************************************

நம் சொந்த மண்
இலங்கையை இழந்தது போல்
நம் தாய் மொழியையும்
அடையாளத்தையும்
மறந்து விட
ஊடகமாக இருப்பது வேறு யாருமே இல்லை.
தமிழனே தான்......

தமிழா உனக்கு வெட்கமாக இல்லை....
உலகின் முதல் தோன்றல் நாம்.
நாம் ஏன் பிற மொழியை பேச வேண்டும்....
நம் மொழியில் இருந்து தான்
அனைத்தும் தோன்றியது......

அடையாளத்தோடு வாழு தமிழா.....
தமிழன் என்று கர்வமாகச் சொல்.....
தமிழில் பேச பெருமைப்படு.......

~ தமிழச்சி பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (18-Dec-16, 8:51 am)
பார்வை : 222

மேலே