தமிழ்

தமிழ்
=அஅஅஅஅ=

உயிரும் மெய்யும் இணைந்தது தமிழ்......
உயிரும் மெய்யும் இணைந்ததே வாழ்க்கை.....

தாளத்தில் பிறந்தது இசை
தாளமாகவே ஆனது தமிழ்.......

ஓசையும் தமிழ்....
ஆசையும் தமிழ்.....
நீயும் தமிழ்.....
நானும் தமிழ்.....
இடையில் எதற்கு அயல்.....

குயிலின் மொழி தமிழ்.....
ஆவின் மொழி தமிழ்.....
இங்கேயே பிறந்தது தமிழ்.....
இதயத்தில் பிறந்ததே தமிழ்......

சான்றோனும்
பாமரனும்
உணரும் தமிழ்......
பாட்டாளியும்
படித்தவனும்
பேசும் தமிழ்.......

~ தமிழச்சி பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (18-Dec-16, 9:02 am)
Tanglish : thamizh
பார்வை : 186

மேலே