அமிர்தம்( தமிழ்)
நீ தமிழ்,
ஆழ் கடல்நடுவினிலே
பலஇறை கூடிய சபையினிலே யருள்பெற்று அவதரக்கப்பட்டவள் நீ
தேவர்களாலும் அசுரர்களாலும்
கடையப்பட்ட மூன்றெழுத்து அமிர்தம் நீ
நான் நாள்தோறும் பருகும் உன்
ஒவ்வொரு வரியிலும் திகட்டாத
தேனருவி நீ
உன்னை உணர்ந்த
கலைஞர்களுக்கு என்றும் தீராத
தாகம் நீ
விசித்தரப் படைப்புகளை
ஆங்காங்கு திரட்டிக்
கொண்டிருக்கும் பல
கவிஞர்களையும் புலவர்களையும்
ஈன்றுகொண்டிருக்கும்
எங்கள் தாய் நீ
அன்றும் இன்றும் என்றும்
எங்களை ஆழ்ந்தும் மேலும்
ஆழப்போகும் படைபலமிக்க
அழிவில்லா அரசியும் நீயே
வளர்க உன் தாய்மை.....