லோன் மேளாவும் டபுள் தமக்காவும்

ஏண்டா எழிலரசா, அடிக்கடி நாளிதழ்களில் வர்த்தகர்கள் லோன் மேளா டபுள் தமக்கா-ன்னெல்லாம் விளம்பரம் குடுக்கறாங்க. அதுக்கெல்லாம் என்னடா அர்த்தம?
@@@@@
நண்பா பாண்டியா, லோன்-ன்னா கடன். மேளத்தைத்தான் மேளா-ன்னு சொல்லறாங்க. அதாவது மேள தாளத்தோட.கடன் வழங்குவாங்க போல இருக்கு. பாவம் அவுங்களுக்கு கடன் வழங்கும் விழா -ன்னு சொல்லறதுக்கு வெக்கமா இருக்கும் போல இருக்கு.
@@@@@
அந்த டபுள் தமக்கா..........… ?
@@@@
புகை பிடிக்கறத தம் அடிக்கிறதுன்னு சொல்லுவாங்க. இரட்டை சகோதரிகள் (அக்காமார்கள்) {புகை பிடிக்கும் இளைஞிகளும் மாநகரங்களில் இருப்பதாகச் சொல்கிறார்கள்} தம் அடிச்சா அத டபுள் தமக்கா-ன்னு சொல்லறாங்க போல இருக்கு.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@
Dhamaka = discount: விலையைக் குறைத்து (விற்பனை செய்வது, கழிமானம்) திருவிழா நேரங்களில் டபுள் தமக்கா விளம்பரங்களை ஊடகங்களில் பார்க்கலாம். திரை மற்றும் வானொலி ஊடகங்களில் தமிழ்.உச்சரிப்பு தரம் குறைந்ததாக இருப்தையும் சென்னை "செந்தமிழ்" சொற்களை பெருமளவில் பயன்படுதையும் தடுத்து நிறுத்தும் பொறுப்பு தமிழ் வளர்ச்சித் துறைக்குத் தரப்படவில்லையா? தமிழ் வளர்ச்சித் துறையின் பணி என்ன?

எழுதியவர் : மலர் (18-Dec-16, 11:32 am)
பார்வை : 215

சிறந்த நகைச்சுவைகள்

மேலே