என்றும் உன் காதலனாய்

நீ என்னை நினைத்திடவே
ஒருவழி தெரியலையே
என்ன சொல்லுகிறாய் உன்
விழி மொழி புரியலையே

உன் சம்மதம் கிடைக்குமென்றால்
ஒரு ஜென்மம் காத்திருப்பேன்
அதை நீ மறுப்பதென்றால்
உன் நினைவால் வாழ்ந்திருப்பேன்

மறித்தால் நிரூபிக்க
வழி ஒன்றும் இல்லையடி
வாழ்ந்தால் நிரூபிக்கலாம்
என்பதால் வாழ்கின்றேன்

என்றாவது வருமென்றால்
வரட்டும் அதுவாக
அதுவரை காத்திருப்பேன்
என்றும் உன் காதலனாய்

எழுதியவர் : ருத்ரன் (18-Dec-16, 10:44 pm)
பார்வை : 207

மேலே