சோகப்புயல்
மழைக்காய் தவமிருந்தோம்
நிசம் தான்!
மழை வருவிக்கும் திறனோ
மரங்களின் வசம் தான்!
சிறுமழை அளித்து
பெருமரங்கள் அழித்த
வர்தாவால் வந்தது
முதலுக்கே மோசம்!
கூடிழந்த பறவைகளும்
கூடிகூடித் தம்முள்
பலகாலம் தம்மிழப்பைத்
தாங்கொணாமல் பேசும்!
கரை கடந்த புயலால்
தரை கிடக்கும் மரங்களினால்
மனங்களில்
சுழன்றடிக்கும் சோகப்புயல்
கரையை என்று கடக்கும்?