ரத்த பாத்திரம் நிறைந்தது ஒரு பக்க கதை- கவிஜி

ரத்த பாத்திரம் நிறைந்தது.... ஒரு பக்க கதை- கவிஜி
அவனுக்கு அவளை பிடிக்காது. அவளுக்கு அவனை பிடிக்கவே பிடிக்காது.
இது வழக்கம்தான். வழக்கத்துக்கு மாறாக வாழ்க்கை அன்று இருந்தது. ஊர் முழுக்க பிணங்கள். மரண ஓலங்கள். மானுட சலுகைகள்....இன்னதென தெரியாத வஞ்சத்தில் நெஞ்சம் சுட்ட போதிக் காடுகளில் காணும் மட்டும் நெருப்பும்.. சாவும்.
நின்று வருடம் எதுவும் வருடிக் கொள்ளும் தெருவாகிப் போனது. பிம்பமற்ற வீடுகளின் நிழலைக் காணவில்லை. தேடும் விழிக்குள் கறுப்பும் கறுப்புமே காட்சியாகி புகை விட்டுக் கொண்டிருந்தது. பாறைகள்.. பெரும்பாறைகள் கொண்ட சந்துக்குள் அவனும் அவளும்... வெறித்த கண்களில்... வெறுப்பைக் காட்சிக்குள் மாற்றி மாற்றிக் கொண்டார்கள். கொய்யத் தவழும் உயிரின் சுமையை உணர உணர தீயைச் சுடும் தெவிட்டிய நா கொண்டு காரி உமிழ்ந்து கொண்டார்கள். காரணம் அறியா பருவம் தாண்டா கோளாறுக்கு குமிழின் சுவற்று சித்திரம் உடை உடைய பெரும் பாரமாக செத்துக் கொண்டிருந்தார்கள்....ஊர் மக்கள். உயிர்கள் நொறுங்கும் ஓசை இசைக்கத் துவங்கியிருந்தது.
பிணம் தின்னும் பிணத்தில் மீண்டும் பிணமாகி கிடந்தது உயிர். அந்த வானம் முழுக்க பட்சிகளின் கோரத்தாண்டவம். செத்து வீழும்... வீழ்ந்த பின்னும் செத்து வாழும்... மனிதத் தலைகளில் .. பிண்டம் இல்லை. பிண்டம் இருக்கும் உடலுக்கு தலைகள் எங்கே...?
விதி செய்த மதி கடந்து பாயும் நோக்கத்தின் குருதித் துளைகள்.. மழையாகினவோ..! வெறித்த அப்பாத்திரத்தில் நிரம்பித் தவித்தது ரத்த மழை. கத்தும் வலியின் கொத்தும் குயிலாக பாம்பென சீறுவது மானுடம். ஆக அப்படி என்றே உருண்டு கிடந்தது ஊர் வனங்கள்.
புரியாது.. நுழையாது...அறியாது...கரையாது...வளையாது...விளையாது....நிலையா அது....? கொலையா இது...!
கொன்றவன் எங்கே.. தின்றவன் எங்கே..? யாவும் யாவும் தாவித் திரிய அவர்கள்.. மீண்டும் பார்த்துக் கொண்டு ஒருவரையொருவர் அடித்துக் கொண்டார்கள். கடித்துக் கொண்டார்கள். மடித்துக் கொண்டார்கள். உடைத்துக் கொண்டார்கள். முகம் கொண்ட நகத்தில் அவளின் சதைகள். பர பரவென விரவிய அவளின் இதழில் அவனின் யுத்த கிழித்தல். கடிக்க இனித்தது ரத்தம். கொடுக்காய் இழுத்தது முத்தம். சத்தம் சூழ பிணங்கள் வாழ்த்த உடல் வருடி.. உயிர் கிழித்துக் கொண்டார்கள். மாறி மாறி ஆணியை அடித்தார்கள். எட்டி உதைத்தார்கள். எங்கும் தாங்கும் வன்மத்தை மயிர் பிடுங்கி சிரித்தார்கள்..திட்டித் தீட்டினார்கள். வசைகளில் எச்சில் வழிய சிறுநீர் அள்ளி குளித்தார்கள். ஓங்கி ஓங்கி துப்பினார்கள். இந்த முகம் அற்ற கோரத்தின் நாக்கு சுழல அவளின் உடல் முழுக்க தீண்டினான். தீர்ந்து விட்ட பெண்மையை சுரண்டினான். தீராத அவனை.. பிராண்டினாள். அவள் வாய்க்குள் அவன் மொத்தம் அடங்கி வழிந்தது. பாம்பின் பின்னல்களில் உடலும் உடலும் சதையும் சதையும் ரத்தமும் ரத்தமும்.. உடைந்த முகமும் முகமும்.. உள்ளூர ஊரும் உயிரும் உயிரும்... ஒன்றாகி ஓங்கி ஓங்கி செத்துக் கொண்டார்கள்.
அது நீளமான ராத்திரியை யாத்திரையாக்கியது. ரத்த மழை விட்டபாடில்லை. யுத்தக் கலவி நிற்கவேயில்லை. வந்து விழவேயில்லை விந்து நாளங்கள். தந்தும் தீரவில்லை யோனி சிருஷ்டிகள். காடும் அலறிய காற்றும் நெளிய புழுக்களின் அமீபாவாகி ஓருயிரானார்கள். அது ஒரு துவக்கத்தின் மறு புள்ளியென பூமி தன் கதவை இழுத்தது சாத்திக் கொண்டிருந்தது.
கவிஜி