ஒரு கவிஞனின் அர்பணிப்பு
கண்ணில் கண்ட பெண்களின் அழகை எல்லாம் இரசிப்பதே குற்றமென்பேன்..
அனைத்து பெண்களின் உடை, நடை, பாவனை என்றெல்லாம் கவிபாடுவது மாபெரும் குற்றமென்பேன்...
பரிசு வேண்டியோ,
சிறந்த கவிஞரென்ற பட்டம் வேண்டியோ,
புகழ் வேண்டியோ கண்ணியமில்லாது
கண்ட பெண்களின் அழகை இரசிப்பேனோ??..
வர்ணிப்பேனோ???...
அவ்வாறு வர்ணிக்கும் காமூகர் கவிதைகளையும் சிறப்பென்பேனோ????...
கவிதை பாடுவதிலும் கண்ணியம், கட்டுபாடு மறவேன்...
நாவடக்கத்தோடு கூடிய
நல்லறிவொழுக்கத்தை என்றும் கைவிடேன்...
ஏற்றமுறும் உயர் உணர்வுகளை போற்றி,
ஒற்றுமையை நிலைநாட்டி,
நல்லதொரு மனித சமுதாயம் அமைக்க என் சிந்தைவரிகளை அர்பணிக்கிறேன்...