அன்பு மகளின் அழகு ஒவியம்
என் அன்பு மகளின்
கை பட்ட காகித ஒவியமும்
உயிர்பித்து ஓட கண்டேன்
அவள் கை பட்ட பென்சிலிலும் அச்சாணியின் ஆழம் கண்டேன்
அவள் கிழிந்த கோடுகள் எல்லாம்
ஆறுகளாய் ஓட கண்டேன்
அவள் அளித்த ரப்பரின் தூசுகள் துளிர்விட்டு பட்டாப்புச்சியாய் பரக்க கண்டேன்
அவள் தெளித்த பேனா மைகளின் சிதறல் துளிகள் உருவபொம்மையாய் உருமாற கண்டேன்
அன்று தான் கண்டுகொண்டேன் அன்பு மகளே நீ ஒவியங்களை வரைவதில்லை நீ வரைந்த ஒவ்வொண்றும் தான் ஒவியங்களாய் உருமாறி இருக்கின்றன என்று