மனித நேயம்

மனிதனின் நாகரிக வளர்ச்சியினால்
தனிமை படும் மனித நேயம்
உணர்வு இருந்தும் பணம் என்ற காகிதத்தால்
சிக்கி உண்டு சீரழிகிறது மனித நேயம்

உயிர்ப்பு தரும் சில மனிதர்களையும்
காயம் கொள்ள வைப்பதால்
உறைந்து போகிறது மனித நேயம்

போலிகள் நிறைந்து வருவதால்
மனித நேய உணர்வும்
போலியின் வெண்மையில் கரைந்து போகுமா ?

எழுதியவர் : கலையடி அகிலன் (25-Dec-16, 9:38 am)
Tanglish : manitha neyam
பார்வை : 143

மேலே