தாழில்லா கதவு
திறந்தவெளி அல்ல
மறைவுகள் இருக்கிறது
நிறைவுகள் அதிகமாய்
குறை மட்டும் ஒன்று இரண்டாய்
புரிதல் கொண்ட உறவுகள்
சிறு பிரிவை எதிர்கொள்ளும்
காலங்கள் சக்கர வடிவானவை
வாழ்க்கை எல்லாம் சுமந்து வரும்
சிறு இடைவெளியில் பெருங்
குழப்பங்கள் உள்ளத்தின் நிலையை
அறிவால் வசப்படுத்திட முடியாது
உள்ளம் ஒரு மாயைதான்
வினாக்களை எழுப்பும்
வீண் சந்தேகம் கொள்ளும்
இறந்த காலங்களை கிளறும்
கோபங்களை வெறியாய் திரிவு செய்யும்
தாழில்லா கதவாய் உள்ளம்
ஆபத்தாய் மாறும் உணர்வுகளுக்கு
அடிமையாகும் உறுப்புக்கள்
உண்மை நிலையை தேடுவதில்லை
தனிமையின் ஆண்மீகம்
அழகானது நேர்த்தியானது
மௌனமாய் ஒரு நிமிடம்
உள்ளத்தை சாந்தமாக்கியபடி
உரியரைத் தேடி உங்கள்
குழப்பத்தை சொல்லியபடி
விடை தேடுவது ஆரோக்கியமே
பிணைப்பாய் இணைப்புகள் இன்னும் இறுக்கம் ஆகும்
உயிர் நற்பு பிரிகிறது
தொப்புள் கொடி சொந்தம் முறிகிறது
பிரிக்க முடியாத உறவும் பிரிகிறது
உள்ளத்தின் சூழ்ச்சியினால்தான்
உள்ளம் உன்னிடம் எத்தனையோ
கேள்விகள் கேட்கும் ஆயிரம்
குழப்பங்களை தோற்றுவிக்கும்
நிவர்த்தி செய்ய உன்னால் முடியும்
உரியவரைத் தேடு குழப்பங்களை கூறு களைகளை அகற்று களியாய் உள்ளத்தில் தீபம் ஏற்று .......
தாழிட்டே வைத்துக் கொள்
உள்ளம் அப்படித்தான் கடிவாளம்
நாம்தான் இட வேண்டும்
வெளியில் இருப்போன் அல்ல
இல்யாஸ் இம்றாஸ்